ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு துவங்கியது!

Published : Apr 20, 2023, 05:56 PM IST
ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படப்பிடிப்பு துவங்கியது!

சுருக்கம்

ஹரிஷ் கல்யாண்-அட்டகத்தி தினேஷ் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும், 'லப்பர் பந்து' படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னைக்கு அருகே துவங்கிய.  

கனா,  எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குநர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் வசனம் எழுதிய  தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’.  தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கடந்த வருடம் வெளியான சர்தார், காரி, ரன் பேபி ரன்  ஆகிய வெற்றிப் படங்களையடுத்து  லப்பர் பந்து படத்தைத்  தயாரிக்கிறது.

இரண்டாம் திருமணம் செய்த ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..! அது இந்த படத்தின் இரண்டாம் பாகமா?

இந்த படத்தில்... ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன்  உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஜாக்கெட் போடாமல் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா நடத்திய போட்டோ ஷூட்..! விமர்சித்த நெட்டிசனுக்கு நச் பதிலடி!

கடந்த மார்ச் முதல் வாரத்தில் துவக்க விழா பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கி உள்ளதை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்ள, ஜி.மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!