புகழ்பெற்ற பாப் பாடகர் மூன்பின் காலமானார்... 25 வயதில் மர்ம மரணம் - போலீஸ் தீவிர விசாரணை

Published : Apr 20, 2023, 04:03 PM IST
புகழ்பெற்ற பாப் பாடகர் மூன்பின் காலமானார்... 25 வயதில் மர்ம மரணம் - போலீஸ் தீவிர விசாரணை

சுருக்கம்

கொரியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ பாப் குழுவின் பாடகரான மூன்பின் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த சம்பவம் அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கொரியாவில் ஆஸ்ட்ரோ என்கிற புகழ்பெற்ற பாப் இசை குழு இயங்கி வருகிறது. இந்த குழுவின் முக்கிய அங்கமாக இருந்தவர் தான் பாப் பாடகரான மூன்பின். இவர் படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான மூன்பின், கடைசியாக மொமண்ட் ஆஃப் 18 என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதுதவிர வெப் தொடர்கள், டிவி சீரியல்களிலும் நடித்துள்ள மூன்பின், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார். இவ்வாறு நடிகர், பாடகர், தொகுப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்த மூன்பின்னுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறந்த பாடகராக விளங்கி வந்த மூன்பின் நேற்று உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்... வில்லங்கமான வெப் தொடரில் நிர்வாணமாக நடிக்கப் போகிறாரா சமந்தா..? கிளம்பிய புது சர்ச்சை

25 வயதே ஆகும் மூன்பின் சியோல் நகரில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மேனேஜர் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மூன்பின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மூன்பின் மறைவு குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்பின் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது அவரை யாராவது கொன்றுவிட்டார்களா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்பின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை, பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மூன்பின்னின் மறைவால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... மச்சக்காரன்யா சூரி... மீண்டும் வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்து கெத்து காட்டும் விடுதலை நாயகன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?