தீபாவளிக்கு அடிச்சது லக்கி பிரைஷ்... பிரபல நடிகைக்கு பரிசாக கிடைத்த காஸ்ட்லி கிப்ட்...! யார் கொடுத்தது தெரியுமா...?

Published : Oct 28, 2019, 01:09 PM ISTUpdated : Oct 28, 2019, 04:48 PM IST
தீபாவளிக்கு அடிச்சது லக்கி பிரைஷ்... பிரபல நடிகைக்கு பரிசாக கிடைத்த காஸ்ட்லி கிப்ட்...! யார் கொடுத்தது தெரியுமா...?

சுருக்கம்

தீபாவளின்னாலே ஸ்பெஷல் தான், அதிலையும் ஹன்சிகா மோத்வானிக்கு தீபாவளிக்கு கிடைச்ச காஸ்ட்லி கிப்ட் அவங்களை செம்ம ஹாப்பி ஆக்கியிருக்கு. 

தீபாவளிக்கு அடிச்சது லக்கி பிரைஷ்... பிரபல நடிகைக்கு பரிசாக கிடைத்த காஸ்ட்லி கிப்ட்...! யார் கொடுத்தது தெரியுமா...?

தீபாவளின்னாலே ஸ்பெஷல் தான், அதிலையும் ஹன்சிகா மோத்வானிக்கு தீபாவளிக்கு கிடைச்ச காஸ்ட்லி கிப்ட் அவங்களை செம்ம ஹாப்பி ஆக்கியிருக்கு. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த தேசமுருடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இப்போ மறுபடியும் தனது தாய் வீடான தெலுங்கு சினிமாவிற்கே திரும்பியிருக்கிற ஹன்சிகா, அங்க சந்தீப் கிருஷ்ணாவுடன் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல். என்ற படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் அனுஷ்காவை வைத்து பாகமதி படம் இயக்கின அசோக் ஒரு வெப் தொடர் இயக்க இருக்கார். அதிலையும் ஹன்சிகா நடிக்க இருக்குறத தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சமயத்தில தீபாவளி பண்டிகைக்காக கிடைச்ச காஸ்ட்லி கிப்ட், ஹன்சிகாவை திக்கு முக்காடி வச்சிருக்கு. ஏன்னா 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை ஹன்சிகாவுக்கு கிப்ட் பண்ணியிருக்காங்க அவங்க அம்மா. இதனால ஹன்சிகா செம்ம ஹாப்பியா இருக்காங்க.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?