தன் பட தயாரிப்பாளரையே 'சீட்டிங் பார்ட்டி' என்று ட்விட் போட்ட பிரபல ஹீரோ....

By Muthurama LingamFirst Published Oct 28, 2019, 12:46 PM IST
Highlights

கழுகு, கழுகு 2 படங்களை இயக்கியுள்ள சத்ய சிவா இயக்கத்தில் ராணா, ரெஜினா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மடை திறந்து'. தெலுங்கில் இந்தப் படத்துக்கு '1945' என்று பெயரிட்டனர். யுவன் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் உள்ளது. கே.ராஜராஜன் தயாரித்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டவுடன் அப்பதிவுக்குக் கீழே,...இன்னும் அதிக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக அவரது யோசனை இது. தயவுசெய்து இப்படத்தை ஊக்குவிக்க வேண்டாம்...என்று அப்படத்தின் ஹீரோவான ராணா ட்விட் செய்துள்ளார். இதையொட்டி அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நடுவிலிருந்த மோதல் வலுவடைந்துள்ளது.

கழுகு, கழுகு 2 படங்களை இயக்கியுள்ள சத்ய சிவா இயக்கத்தில் ராணா, ரெஜினா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மடை திறந்து'. தெலுங்கில் இந்தப் படத்துக்கு '1945' என்று பெயரிட்டனர். யுவன் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் உள்ளது. கே.ராஜராஜன் தயாரித்து வருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு '1945' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனப் படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். அதையொட்டி பலரும் இந்த விளம்பரத்தைப் பகிரவே, நடிகர் ராணா தனது ட்விட்டர் பதிவில், "பண விஷயத்திலும், படத்தை முடிப்பதிலும் தவறிய ஒரு தயாரிப்பாளரின் முடிக்கப்படாத படம் இது. ஒரு வருடத்துக்கும் மேலாக  நான் அவர்களைச் சந்திக்கவில்லை. இன்னும் அதிக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக அவரது யோசனைதான் இந்த ஃபர்ஸ்ட் லுக் பதிவு. தயவுசெய்து இதை ஊக்குவிக்க வேண்டாம். நன்றி" என்று தெரிவித்தார் ராணா.

ராணாவின் இந்தப் பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால், படத்தின் தயாரிப்பாளரைக் கடுமையாகத் தன் பதிவில் விமர்சித்திருப்பதால், பலருமே இதைப் பகிரத் தொடங்கினர். ராணாவின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் ராஜராஜன், "ஒரு படம் நிறைவு பெற்றதா, இல்லையா என்று அந்தப் படத்தின் இயக்குநர்தான் முடிவு செய்யவேண்டும். இந்தப் படம் நிறைவு பெற்றதா, இல்லையா என ரசிகர்கள் முடிவு செய்யட்டும். கிட்டத்தட்ட 60 நாட்கள் படப்பிடிப்பு நடந்து, கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது, நிறைவு பெறாத ஒரு படத்தை யாரும் வெளியிட மாட்டார்கள். இயக்குநர்தான் ஒரு படத்தின் கதையை முடிவு செய்யவேண்டும்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரது மோதலையும் பற்றி எதுவும் கருத்துச் சொல்லாத  இயக்குநர் சத்ய சிவா தனது ட்விட்டர் பதிவில், "மூன்று ஆண்டுகள் கழித்து என் படத்தின் பணிகள் முடிவடைந்து, இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ராணுவப்படை வீரனின் காதல் மற்றும் தேசபக்திக்கு இடையே நடக்கும் உணர்ச்சிப் போர்தான் ’1945’என்று தெரிவித்துள்ளார்.

click me!