
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் தயாராகிவரும் இந்தப் படத்துக்கு, 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். பேட்ட வெற்றியைத் தொடர்ந்து, அனிருத் இசையமைக்கும் 2-வது ரஜினி படம் இதுவாகும்.
தர்பார் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீபாவளி ஸ்பெஷலாக தர்பார் படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது.
இந்நிலையில், தர்பார் படத்தின் பாடல்கள் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மாதம் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அனிருத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, படத்திற்காக அவர், 4 பாடல்களை கம்போஸ் செய்துள்ளாராம்.
இதில், பெரும்பாலானவை மாஸ் பாடல்களாம். ஏற்கெனவே பேட்ட படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பியதால், தர்பார் படத்திலும் அனிருத் அதகளப்படுத்தியிருப்பார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தர்பார் படம் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.