நடிகர் சூர்யா ஒரு சுயநலவாதி..! இவர் மட்டும் 5 மொழில படத்தை வெளியிடலாமா?? எச்.ராஜா டென்ஷன்..!

By manimegalai aFirst Published Nov 4, 2021, 6:58 AM IST
Highlights

நாடு முழுவதும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, அதற்க்கு தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலமும், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போதும்... தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்த நடிகர் சூர்யா தற்போது, தான் தயாரித்து நடித்துள்ள படத்தை மட்டும் சுயநலத்தோடு 5 மொழியில் வெளியிடலாமா?? என நறுக் கேள்வியை எழுப்பியுள்ளார் எச்.ராஜா.

 நாடு முழுவதும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, அதற்க்கு தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலமும், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போதும்... தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்த நடிகர் சூர்யா தற்போது, தான் தயாரித்து நடித்துள்ள படத்தை மட்டும் சுயநலத்தோடு 5 மொழியில் வெளியிடலாமா?? என நறுக் கேள்வியை எழுப்பியுள்ளார் எச்.ராஜா.

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'ஜெய்பீம்'. படம் வெளியாவதற்கு முன்பில் இருந்தே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமா விமர்சகர்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஒரு திருட்டு பழிக்காக எந்த அளவிற்கு இருளர் சமூதாயத்தை சேர்ந்த ஒருவர் வஞ்சிக்க படுகிறார் என்பதையும், நிரபராதியான தன்னுடைய கணவரை வெளியே கொண்டு வர கர்ப்பிணி மனைவி எப்படி பட்ட கஷ்டங்களை சந்தித்து கோர்ட் மூலம் நீதியை பெறுகிறார் என்பதே இந்த படத்தின் கதை.

மேலும் செய்திகள்: Lijo Mol Jose: 'ஜெய்பீம்' தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை... படத்தில் நீங்கள் பார்த்தது நிஜ கண்ணீர்!

 

நீதியை நிலைநாட்டும் துணிச்சல் மிக்க வழக்கறிஞராக செயல்பட்டு, நீதியை பெற்று தந்த வக்கீல் சந்துரு வேடத்தில் சூர்யா வாழ்ந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு தொடர்ந்து...  ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், இப்படத்தில், மொழி திணிப்பு குறித்தும் இப்படம் பேசியுள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ், ஹிந்தி மொழியில் தன்னிடம் பேசும் வட இந்தியர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து தமிழில் பேசு என்று கூறுவார். இந்த காட்சியை குறிப்பிட்டு சில வட இந்தியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Amala Paul: பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமாக கவர்ச்சி காட்டிய அமலா பால்! காண்டான நெட்டிசன்கள்!

 

இதை தொடர்ந்து தற்போது எச்.ராஜா சூர்யாவை ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு  புதிய தேசிய கல்வி கொள்கை திட்டம், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது. இதற்க்கு மத்திய அரசை விமர்சனம் செய்யும் விதமாக... இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.  பின்னர்,  தாய் மொழி, ஆங்கிலம், இவை அல்லது 3-வது மொழியை அவர்கள் விருப்பப்படியே தேர்வு செய்து படிக்கலாம் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த அறிக்கை வெளியான போதே, நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி மீது அட்டாக்...! எகிறி எட்டி உதைத்த நபர்..! பரபரப்பு வீடியோ...

 

பின்னர் அகரம் அறக்கட்டளையின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய போது, புதிய தேசியக் கல்வி கொள்கையான மும்மொழி கொள்கைக்கு,  தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதற்க்கு ஒரு தரப்பினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தாலும், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Priyanka Mohan: ஸ்டக்ச்சர் நச்சு தெரியும்... டைட் உடையில் ஹார்ட் பீட்டை எகிறவிடும் பிரியங்கா மோகன்!

 

தற்போது இதனை நினைவு கூர்ந்துள்ள எச்.ராஜா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்" என தெரிவித்துள்ளார். அதாவது தான் தயாரித்து, நடித்த படம் லாபம் பெறலாம் என்றால் எத்தனை மொழியில் வேண்டுமானாலும் வெளியிடலாம் அது அவருக்கு தவறாக தெரியவில்லை. நம் பிள்ளைகள் மூன்று மொழி படிப்பை படிப்பதற்கு தான் எதிர்ப்பா... என விளாசியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பலர் ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

 

நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். pic.twitter.com/nHRXKw4sjj

— H Raja (@HRajaBJP)
click me!