அவரை யாரும் எட்டி உதைக்கல.? அதெல்லாம் பொய்.. பெங்களூரு போலீஸ் விளக்கம்.. வாய் திறப்பாரா விஜய் சேதுபதி.?

Published : Nov 03, 2021, 11:01 PM ISTUpdated : Nov 03, 2021, 11:04 PM IST
அவரை யாரும் எட்டி உதைக்கல.? அதெல்லாம் பொய்.. பெங்களூரு போலீஸ் விளக்கம்.. வாய் திறப்பாரா விஜய் சேதுபதி.?

சுருக்கம்

வீடியோவில் விஜய் சேதுபதியை உதைப்பதும், அவர் உடனே திரும்பி ரியாக்ட் செய்வதும் தெளிவாகத்தெரியும் நிலையில், பெங்களூரு போலீஸார் இதை மறுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விஜய் சேதுபதி வாய் திறந்தால்தான் உண்மை தெரிய வரும். 

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எகிறி எட்டி உதைத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.  

இன்று மாலை சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்து செல்லும் நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த ஒரு நபர்  ஒருவர், எகிறி எட்டி உதைத்த காட்சியைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள். நடிகர் விஜய் சேதுபதி எங்கு தாக்கப்பட்டார், ஏன் தாக்கப்பட்டார் என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்தது. விஜய் சேதுபதி தாக்கப்பட்டதை ஒரு சாரர் மகிழ்ந்தும் பலர் கண்டனம் தெரிவித்தும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்டதும், படப்பிடிப்புக்காக அவர் பெங்களூர் சென்றிருப்பதும் தெரிய வந்தது. மேலும் ஒரு போதை ஆசாமிதான் அவரை தாக்கியதாகவும், அந்த ஆசாமியை போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளனர். 

விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக இரு தரப்பும் பேசி சமாதானம் ஆனதால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், வீடியோவில் விஜய் சேதுபதியை உதைப்பதும், அவர் உடனே திரும்பி ரியாக்ட் செய்வதும் தெளிவாகத்தெரியும் நிலையில், பெங்களூரு போலீஸார் இதை மறுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விஜய் சேதுபதி வாய் திறந்தால்தான் உண்மை தெரிய வரும். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?