
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நேற்று வெளியா 'ஜெய்பீம்' படத்திற்கும், அதில் நடித்திருக்கும் நடிகர்களுக்கும், தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை லிஜோ மோல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இருளர் சமூதாய மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு அரங்கேறிய அநீதியையும் அடிப்படையாக கொண்டு உண்மை கதையை, கண் முன் நிறுத்தியுள்ள திரைப்படம் 'ஜெய்பீம்'. நேற்று ஓடிடி அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: Amala Paul: பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமாக கவர்ச்சி காட்டிய அமலா பால்! காண்டான நெட்டிசன்கள்!
இந்த படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் முதல், கமல்ஹாசன், பா ரஞ்சித், இயக்குனர் பாண்டிராஜ் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் இந்த படத்தின் கதையையும், இந்த படத்தின் நாயகன் வழக்கறிஞர் சந்துரு மற்றும் சந்துரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் சூர்யாவையும், படக்குழுவினரையும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். பலர் இந்த படத்திற்கு கண்டிப்பாக விருது கிடைத்தே தீரும் என கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Priyanka Mohan: ஸ்டக்ச்சர் நச்சு தெரியும்... டைட் உடையில் ஹார்ட் பீட்டை எகிறவிடும் பிரியங்கா மோகன்!
இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள லிஜோ மோல் 'ஜெய் பீம்' படத்தில் நடித்த, அனுபவம் குறித்தும் இப்படத்திற்காக கிளிசரின் போடாமலேயே கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்ததாக கூறி மெய் சிலிர்க்க வைத்துள்ளார். ஜெய்பீம் படத்தில் செங்கனி என்கிற பழங்குடியின பெண்ணாக நடித்திருப்பவர் தான் லிஜோ மோல். உயிரோட்டமுள்ள படத்தின் கதைக்கேற்ப அட்டகாசமாக நடித்து, தமிழ் மக்களின் இதயத்திலும் லிஜோமோல் இடம் பிடித்து விட்டார். இவர் ஏற்கனவே இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' மற்றும் 'தீதும் நன்றும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: Subaskaran Allirajah: பாரம்பரிய உடையில் மனைவியுடன் ராமேஸ்வரத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்த சுபாஸ்கரன்!
ஆனால் ஜெய் பீமில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி முத்திரை பதித்து விட்டார். இந்த படத்தில் நடித்தது குறித்து லிஜோ மோல் கூறுகையில், படத்தில் தனக்கு பல காட்சிகளில் கிளிசரின் இல்லாமலேயே அழுகை வந்து விட்டதாகவும், இப்போதும், ஜெய்பீம் படித்தில் செங்கனி வேடத்தில் நடித்த பாதிப்பில் இருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இப்போதும் ஜெய்பீம் படத்தை பார்க்கும் போது, தன்னை அறியாமலேயே அழுது விடுவதாகவும் நீங்கள் படத்தில் பார்ப்பது எல்லாம் தன்னுடைய நிஜ கண்ணீர்தான் கூறியுள்ளார். படத்தின் சில காட்சிகளில் டைரக்டர் ஞானவேல் ராஜா, கட் என்று சொன்ன பிறகும் கூட தான் அழுது கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.