மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் தனது முன்னாள் காதலனுடனான டேட்டிங்கை நினைவுகூர்ந்த நடிகை...

manimegalai a   | Asianet News
Published : Nov 03, 2021, 06:15 PM ISTUpdated : Nov 11, 2021, 05:02 PM IST
மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் தனது முன்னாள் காதலனுடனான டேட்டிங்கை நினைவுகூர்ந்த நடிகை...

சுருக்கம்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல மாடல் அழகியும் நடிகையுமான  சன்னி லியோன் தனது முன்னாள்  காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

வலைதளப்பக்கங்களில் கவர்ச்சி காட்டி பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் வெளியிட்ட புகைப்படங்கள்  சர்ச்சையின் உச்சத்தை தொட்டதோடு இவரை இந்திய நாட்டை விட்டு வெளியே  அனுப்ப வேண்டும் என்னும் குரல்களும் வழுத்ததுண்டு. அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆங்கில படங்களில்  கலக்கி வந்த சன்னி லியோன்,  கடந்த  2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான வடகறி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் சன்னி லியோன் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

இதையடுத்து வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது. இருந்தும் தனது 3 வது  தமிழ் படமாக ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும்  புதிய தமிழ்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்த இயக்குனர் யுவன் கிளியோபாட்ரா போல வலிமையாக இருப்பதால் சன்னி லியோனை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.

பல ஆண்களின் கனவு கன்னியாக வலம் வரும் சன்னி லியோன் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல்  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் இரட்டையர்களான இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.  பெண் தொழில் முனைவர், மாடல், நடிகை என பன்முகம் கொண்ட சன்னி லியோன் தனது எல்லா பயணத்திலும் டேனியல் உறுதுணையாக உள்ளதாக அநேக பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சன்னி லியோன் தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.  திருமணத்திற்கு முன்னர் பிரபல ஸ்டேண்டப் காமெடியன்  ரஸல் பீட்டர்ஸை காதலித்ததாகவும். அது தான்  செய்த மோசமான விஷயம் என்றும் கூறியுள்ளார். அதோடு தானும் பீட்டரஸும் பல காலமாக நண்பர்களாக இருந்த நிலையில் டேட்டிங் செய்து சொதப்பிவிட்டோம் என்றும், நண்பர்களாக இருந்தபோது டேட்டிங் செய்தது ஏன் என்று புரியவில்லை. அதற்காக தான் இன்றும் கோபத்தில் இருப்பதாகவும். ஒருவேளை டேட்டிங் செய்யாமல் இருந்திருந்தால் இன்றும் நல்ல நண்பர்களாக இருந்திருப்போம் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!