விஜய் சேதுபதி மீது அட்டாக்...! எகிறி எட்டி உதைத்த நபர்..! பரபரப்பு வீடியோ...

Published : Nov 03, 2021, 06:56 PM ISTUpdated : Nov 03, 2021, 07:29 PM IST
விஜய் சேதுபதி மீது அட்டாக்...! எகிறி எட்டி உதைத்த நபர்..! பரபரப்பு வீடியோ...

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை (Vijay sethupathy) ஒருவர் ஏர்போர்ட்டில் எட்டி உதைத்து தாக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை ஒருவர் ஏர்போர்ட்டில் எட்டி உதைத்து தாக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகர்கள் மத்தியில், ஹீரோ என்கிற அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதித்து விட்டு, வில்லன், குணசித்திர வேடம், என கலந்து கட்டி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட், டோலிவுட், தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் வில்லனாக நடிக்க ஹீரோவை விட அதிகமாக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.

இவரது இந்த துணிச்சலான நடிப்பை பல பிரபலங்கள் அவ்வப்போது நெகிழ்ந்து பாராட்டுவதும் உண்டு. நடிகர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி திரையுலகினரால் சிறந்த மனிதராகவும் பார்க்கப்படுபவர். திரையுலகை சேர்ந்தவர்களோ... தனக்கு தெரிந்தவர்களோ கஷ்டத்தில் இருக்கிறார்கள் என கேள்வி பட்டால் உடனடியாக அவர்களுக்கு ஓடி சென்று உதவும் மனிதர். இதன் காரணமாகவே இவருக்கு திரையுலகில் எதிராக விமர்சனங்கள் வருவதில்லை.

மேலும் செய்திகள்: Lijo Mol Jose: 'ஜெய்பீம்' தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை... படத்தில் நீங்கள் பார்த்தது நிஜ கண்ணீர்!

 

அதே போல் முன்னணி நடிகராக மாறி விட்டால்... ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க பந்தா காட்டும் சில நடிகர்கள் மத்தியில், அவர்களை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறிக்கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி. விஜய், கமல், என முன்னணி நடிகர்களுக்கு செம்ம கெத்தான வில்லனாகவும் தற்போது திரையுலகில் உள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படும், இவர் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்ற போது ஏர்போர்ட்டில் இவரை  ஒருவர் எட்டி உதைத்து தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: Amala Paul: பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் படு மோசமாக கவர்ச்சி காட்டிய அமலா பால்! காண்டான நெட்டிசன்கள்!

 

சில வினாடிகள் மட்டுமே ரெகார்ட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், விஜய் சேதுபதி தன்னுடைய பாதுகாவலர்களுடன் சென்றுகொண்டிருக்கும் போது, திடீர் என பின்னால் வரும் நபர் அவரை எட்டி உதைத்து தாக்குகிறார். பின்னர் விஜய் சேதுபதியுடன் வந்தவர்கள் மற்றும் சி.எஸ்.எஸ்.எப் அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்துவது போல் உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை, திருநங்கை வேடத்தில் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' பணத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்