Kingston Review : ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் கலக்கலா? சொதப்பலா? விமர்சனம் இதோ

Published : Mar 07, 2025, 08:27 AM IST
Kingston Review : ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் கலக்கலா? சொதப்பலா? விமர்சனம் இதோ

சுருக்கம்

கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், திவ்ய பாரதி நடிப்பில் வெளியாகி உள்ள கிங்ஸ்டன் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

Kingston Movie Review : ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படம் கிங்ஸ்டன். இப்படம் மார்ச் 7ந் தேதியான இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. 

புதுமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள கிங்ஸ்டன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். பேச்சிலர் படத்திற்கு பின்னர் திவ்ய பாரதியும், ஜிவி பிரகாஷும் ஜோடி சேரும் படம் இதுவாகும். கிங்ஸ்டன் திரைப்படம் ஃபேண்டஸி நிறைந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். அவர் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும்.

கிங்ஸ்டன் திரைப்படத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இப்படம் தமிழகத்தில் மட்டும் 216க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி இருக்கிறது. ஜிவி பிரகாஷ் நடித்து அதிக திரைகளில் ரிலீஸ் ஆகும் படம் இந்த கிங்ஸ்டன் தான். இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்.... அமானுஷ்யங்கள் நிறைந்த கடல் பயணம்; மிரள வைக்கும் ஜிவி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ டிரைலர்

கிங்ஸ்டன் படம் நன்றாக உள்ளது. இதுபோன்ற ஜானரில் படம் எடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால் படக்குழு சிறப்பாக பணியாற்றி இருக்கிறது. குறிப்பாக ஒளிப்பதிவு மற்றும் வி.எப்.எக்ஸ் என டெக்னிக்கல் குழுவினரின் பங்களிப்பு அருமை. இரண்டாம் பாதி தான் படத்திற்கு முக்கியம். அதில் நிறைய ஃபேண்டஸி காட்சிகள் உள்ளன. நிச்சயம் குழந்தைகளுக்கு இப்படம் பிடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

கிங்ஸ்டன் ஒரு கோஸ்ட் அட்வெஞ்சர் கதையம்சம் கொண்ட படம். திரைக்கதை நன்றாக இருந்திருந்தால் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகியிருக்கும். முதல் பாதி எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் இரண்டாம் பாதி ஈர்க்கும்படி இல்லை. காட்சியமைப்பு, பின்னணி இசை அருமை, ஜிவி பிரகாஷ் - சேட்டனின் நடிப்பு பாராட்டுக்குரியது. படம் பிலோ ஆவரேஜ் தான். இம்பிரஸ் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கிங்ஸ்டன் படத்தில் விஷுவல் அருமையாக உள்ளது. ஜிவி பிரகாஷுக்கு முதல் ஆக்‌ஷன் ரோல் உள்ள படம் இது, பலமான கதை மற்றும் அதற்கு பக்கபலமாக இசையும் அமைந்துள்ளது. இயக்குனர் கமல் பிரகாஷ், ஆழமான சூப்பர் நேச்சுரல் அட்வெஞ்சர் படத்தை பவர்புல்லான மெசேஜ் உடன் கொடுத்துள்ளார். திவ்ய பாரதிக்கு நல்ல வேடம், தியேட்டரில் பார்க்க ஒர்த்தான படம் என பதிவிட்டுள்ளார்.

கிங்ஸ்டன் படத்தின் முதல் பாதி ஆவரேஜ்; இரண்டாம் பாதி ரொம்ப சுமார். மொத்தத்தில் ஃபேண்டஸி அட்வெஞ்சர் திரைப்படமான இது நிறைய இடங்களில் நம்மை கவர தவறி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கிங்ஸ்டன் திரைப்படம் ஒரு விஷுவல் ட்ரீட்டாக உள்ளது. இப்படம் உங்களை ஒரு ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்து செல்லும். அனைத்து வயதினருக்கும் சிறந்த திரையரங்க அனுபவமாக இப்படம் இருக்கும். ஜிவி பிரகாஷ் நடிகராகவும், கம்போஸராகவும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார். திவ்ய பாரதியும் முக்கியமான ரோலில் ஜொலிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்.... ஜிவி பிரகாஷ் போட்ட மஜாவான பாட்டு; வைரலாகும் கிங்ஸ்டன் செகண்ட் சிங்கிள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!