இப்படி நெடுநெடுனு வளர்ந்துருக்காரே மாப்பிள்ளை..! மம்மூட்டி ஆச்சர்யமாக பார்த்த மணமகன்.. வைரலாகும் போட்டோஸ்!

Published : Jul 18, 2021, 12:29 PM IST
இப்படி நெடுநெடுனு வளர்ந்துருக்காரே மாப்பிள்ளை..! மம்மூட்டி ஆச்சர்யமாக பார்த்த மணமகன்.. வைரலாகும் போட்டோஸ்!

சுருக்கம்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி சமீபத்தில் கலந்து கொண்ட திருமண புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, ட்ரெண்ட் ஆகியுள்ளது.  

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி சமீபத்தில் கலந்து கொண்ட திருமண புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, ட்ரெண்ட் ஆகியுள்ளது.

மலையாள படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நடிகர் மம்மூட்டி, ஷூட்டிங் பணிகள் இல்லாத போது, தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஃபேன்ஸ், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் அவர்களது குடும்ப விசேஷங்களில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி இவர் கலந்து கொள்ளும் போது எடுக்கப்படும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகிறது.

மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' புகழ் வந்ததால் இப்படி ஆகிடுச்சே..? அபராதம் போட்ட அதிகாரிகள்..!
 

இந்நிலையில், மம்மூட்டி கடந்த வாரம்... தில்ஷாத் கமாலுதீன் மற்றும் சாரா அஷ்ரப் பேக்கர் ஆகியோரின் திருமணத்தின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். முதல் முறையாக இந்த திருமணத்தின் போது தான் மணமகனை பார்த்துள்ளார் மம்மூட்டி. அப்போது நெடுநெடுவென வளர்ந்திருந்த தில்ஷாதை நிமிர்ந்து பார்த்தபடி எடுக்கப்பட்ட... மம்மூட்டியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: துளி கூட ஆடையின்றி... அதிர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிரபல சீரியல் நடிகை...!
 

மணமகன் தில்ஷாத் முன்னாள் தடகள வீரர். தற்போது மத்திய கலால் சுங்கத் துறையில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் மனைவி சாராவுடன் மணக்கோலத்தில், மம்மூட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது நடிகர் மம்மூட்டி, 'பீஷ்மா பர்வம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இவரது நடிப்பில், 'அமல் நீரட்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி