சீறி வரும் காளையாய்... ஏர் பிடித்து மிரட்டும் சூர்யா! வெளியானது பிறந்தநாள் காமென் டிபி!

Published : Jul 18, 2021, 11:18 AM ISTUpdated : Jul 18, 2021, 11:19 AM IST
சீறி வரும் காளையாய்... ஏர் பிடித்து மிரட்டும் சூர்யா! வெளியானது பிறந்தநாள் காமென் டிபி!

சுருக்கம்

நடிகர் சூர்யா வரும் ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஆனால் இவரது ரசிகர்களோ தற்போதே சூர்யாவின் பிறந்தநாளை சிறப்பிக்க துவங்கி விட்டனர். அந்த வகையில் இவர்கள் வெளியிட்டுள்ள காமென் டிபி தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.  

நடிகர் சூர்யா வரும் ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஆனால் இவரது ரசிகர்களோ தற்போதே சூர்யாவின் பிறந்தநாளை சிறப்பிக்க துவங்கி விட்டனர். அந்த வகையில் இவர்கள் வெளியிட்டுள்ள காமென் டிபி தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' புகழ் வந்ததால் இப்படி ஆகிடுச்சே..? அபராதம் போட்ட அதிகாரிகள்..!
 

சமீப காலமாக முன்னணி நடிகர், நடிகைகள், பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. இப்படி வெளியிடப்படும் காமன் டிபியை ரசிகர்கள் ட்விட்டரின் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூர்யாவின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 'வாடி வாசல்' பட ஸ்டைலில் காமன் டிபி வெளியிட்டுள்ளனர். இதனை நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். இதில் நடிகர் சூர்யா சீறி வரும் காளை போல ஆக்ரோஷமாக ஏர் உழுகிறார். இவரது பின்னல் பல விவசாய மக்கள் ஏர் பிடித்து வருகிறார்கள்.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு தான், சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் 'வாடி வாசல்' படத்தின் டைட்டில் லுக் வெளியானது. இதில் திமிறி வரும் காளையின் சின்னம் இருந்தது. குறிப்பாக காலம் காலமாக மனிதனுக்கும், காளைகளுக்குமான உறவினை கூறுவது போல் இந்த டைட்டில் லுக் அமைந்திருந்தது. இதனை ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கடற்கரையில் அதகளம்... ‘குட்டி நயன்’ அனிகாவின் லேட்டஸ்ட் அட்ராசிட்டி போட்டோ ஷூட்...!
 

இதை தொடர்ந்து, சூர்யாவின் பிறந்தநாளின் போது, வாடி வாசல் அல்லது சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது ஏதேனும் புதிய அப்டேட் வெளிவருமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வரும் காமென் டிபி இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி