சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Published : Feb 23, 2021, 05:11 PM IST
சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சுருக்கம்

மலையாளத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, ,கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மலையாளத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, ,கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்: 'சித்தி 2 ' சாராதவாக மாறுகிறாரா வரலட்சுமி? அவரே வெளியிட்ட உண்மை..!
 

இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில், ஜனவரி 15 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'கிரேட் இந்தியன் கிச்சன்'. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் வெளிப்படுத்தி, நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில், நடிகையாக நடித்திருந்த நிமிஷா சஜயன் நடிப்பு வெகுவாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தற்போது இந்த படத்தை, இயக்குனர் கண்ணன் ரீமேக் செய்ய உள்ளதாகவும் இதில் நிமிஷா சஜயன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் காரைக்குடியில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே இரு மொழியிலும் நன்கு பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

மேலும் செய்திகள்: வாவ்... அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் நடிகை தேவயானி மகள்! தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்!
 

இயக்குனர் கண்ணன் கடைசியாக காமெடி நடிகர் சந்தானத்தை வைத்து 'பிஸ்கோத்து ' படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அதர்வா இணைந்து நடித்துள்ள 'தள்ளிப்போகாதே' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக  மலையாளத்தில் சமீபத்தில் ஓடிடி தலத்தில் வெளியான 'கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!