ஆக்ஷன் த்ரில்லரில் மிரட்ட ரெடியான அருண் விஜய்..! அடுத்தகட்ட பணி தீவிரம்!

Published : Feb 23, 2021, 04:12 PM IST
ஆக்ஷன் த்ரில்லரில் மிரட்ட ரெடியான அருண் விஜய்..! அடுத்தகட்ட பணி தீவிரம்!

சுருக்கம்

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும்  AV31 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில்,  டப்பிங் பணிகள் இன்று காலை, சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.   

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும்  AV31 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில்,  டப்பிங் பணிகள் இன்று காலை, சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்: வாவ்... அச்சு அசல் அம்மாவை போலவே இருக்கும் நடிகை தேவயானி மகள்! தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்!
 

அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த மெடிக்கல் திரில்லரான “குற்றம் 23” மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் AV31 அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, படம் என்னவாக இருக்குமன்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு எகிறியுள்ளது. 

படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும். 

மேலும் செய்திகள்: வாவ்...திடீர் என தேசிய அளவில் ட்ரெண்ட் ஆன அட்லீ பெயர்..! காரணம் தளபதியா?
 

All in Pictures சார்பில் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ரெஜினா கஸண்ட்ரா நாயகியாக நடிக்க,  ஸ்டெஃபி படேல் மற்றும் பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சாம் CS இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். 

2021 வருடத்தில் அருண் விஜய் சினம், அக்னி சிறகுகள், AV32 ( சூர்யாவின் 2D Entertainment தயாரிப்பில் ), என எதிர்பார்ப்பு மிக்க முக்கிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில முக்கியமான படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!