
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்து, படத்தின் டீசரும் இன்று காலை வெளியானது.
'ஜகமே தந்திரம்' திரைப்படம் தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்ற பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், என் ரசிகர்களைப் போல் ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்” Finger Crossed என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும், ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றும் விதமாக , 'ஜகமே தந்திரம்' ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே கடுப்பில் இருந்த ரசிகர்களை, கொந்தளிக்க செய்துள்ளது மற்றொரு விஷயம். அதாவது, இன்று வெளியான டீசரில்... இந்த படத்தின் ஹீரோ தனுஷின் பெயர் இடம்பெற வில்லை. இயக்குனர் மற்றும் டெக்னீசியன் பெயர் இடம் பெரும் இடத்தில் கூட தனுஷ் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை கோவத்தில் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
தனுஷ் ரசிகர்கள் பலர் தனுஷ் இல்லையென்றால்... ஜகமே தந்திரம் என்கிற படமே இல்லை என கூறி வருகிறார்கள். ஏற்கனவே ஓடிடியில் வெளியிட, திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் தற்போது ரசிகர்களும் ஜகமே தந்திரம் படத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.