தல அஜித் நடித்த 'பில்லா', 'ஆரம்பம்', ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் விஜய்யின் நெருங்கிய உறவினர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜித் நடித்த 'பில்லா', 'ஆரம்பம்', ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் விஜய்யின் நெருங்கிய உறவினர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா, ஏற்கனவே தமிழ் திரையுலகில் நடிகராக அவதாரம் எடுத்து, தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து... தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிவிட்ட நிலையில், அடுத்ததாக அவரது இரண்டாவது மகனும் தற்போது திரையுலகில் நடிகராக அவதாரம் எடுக்க உள்ளார்.
தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவிற்கும், ஆகாஷுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்த நிலையில், விரைவில் இவர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
அண்ணன் அதர்வாவை போல், சிறந்த கதையை தேர்வு செய்து நடிப்பதற்காக, பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த, ஆகாஷுக்கு... விஷ்ணுவர்த்தன் கூறிய கதை பிடித்து விட்டதாலும், இந்த படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் பொருத்தமாக இருப்பர் என கூறப்படுவதால், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது இந்தியில் 'ஷெர்ஷா' என்கிற படத்தில் நடித்த முடித்துள்ள நிலையில், விரைவில் இவர் ஆகாஷை வைத்து இயக்க உள்ள படத்தில் படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.