ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கு கிடுக்குப்பிடி! முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற விவகாரம்!

By manimegalai aFirst Published Jun 29, 2021, 1:39 PM IST
Highlights

சமூக வலைத்தளத்தில் நல்ல கருத்துக்களை சொல்லுபவர்களை விட, ஆபாசமாக பேசுபவர்கள் அதிக கவனம் பெறுகிறார்கள். எனவே ஆபாசமாக பேசியே தன்னுடைய பிழைப்பை ஒட்டி வரும் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
 

சமூக வலைத்தளத்தில் நல்ல கருத்துக்களை சொல்லுபவர்களை விட, ஆபாசமாக பேசுபவர்கள் அதிக கவனம் பெறுகிறார்கள். எனவே ஆபாசமாக பேசியே தன்னுடைய பிழைப்பை ஒட்டி வரும் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் செய்திகள்: 51 வயதிலும் உடல் எடையை குறைத்து... செம்ம யங் லூக்கிற்கு மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்! லேட்டஸ்ட் போட்டோஸ்..
 

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் முஹைதீன் இப்ராகிம் என்பவர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கொடுத்த புகார் மனுவில்... சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பலர் பிரபலமாகி வருகிறார்கள். குறிப்பாக தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன் -லைன் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஓடிடி-யில் ரிலீசாகிறதா பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' ?
 

இதுபோன்ற நேரங்களில், பாடங்கள் படிப்பதற்காக ஆன்லைன் செல்லும் போது, இதுபோன்று ஆபாசமாக வீடியோக்களை பார்க்க நேரிடுகிறது. இதனை சிலர் அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்வதால் கலாச்சாரம் சீரழிகிறது என, ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்: 'விக்ரம்' படத்தில் உலகநாயகனுக்கு 4 ஆவது வில்லனாக அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ! யார் தெரியுமா?
 

மேலும் செய்திகள்: காதலர் விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்தபடி நயன்தாரா... தாறுமாறு வைரலாகும் செல்ஃபி போட்டோஸ்...!
 

இவரது புகாரை தொடர்ந்து இந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் வரை சென்றுள்ளது. அதாவது இது போல் தொடர்ந்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடும் 8 பேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களது சமூக வலைதள பக்கத்தை முடக்கம் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள மனுவில், ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கவனத்தை இது போன்ற வீடியோக்கள் சிதறவைக்கும் விதத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

click me!