பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரின் படத்தில் ஜிபி முத்து மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், இந்தியாவுக்காக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். குறிப்பாக இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது, அவரது ஆட்டம் மற்றும் இன்றி அவரது தமிழ் பற்று அவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. இவர் திருக்குறள் மற்றும் தமிழில் போடும் பதிவுகள் மிகவும் பிரபலம்.
இதைத் தொடர்ந்து இவர் 'பிரெண்ட்ஷிப்' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இந்த படத்தில் அர்ஜுன், மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், லாஸ்ட்லியா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது மற்றொரு படத்தில் ஹர்பஜன் சிங் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை 'பிரண்ட்ஷிப்' படத்தை இயக்கிய, ஜான் பால் தான் இயக்குகிறார். திரில்லர் மற்றும் காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் தற்போது முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் விரைவில் முடிவடைந்து இந்த படம் ரிலீசுக்கு தயாராகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் படத்தின் பெயரை குறிப்பிடாமல் ஜிபி முத்து 2 படங்களில் நடித்துள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: அடி தூள்... முதல் வாரத்திலேயே மொத்த போட்டியாளர்கள் மனதையும் கவர்ந்த ஜிபி முத்து..! வெளியான புரோமோ!
மேலும் செய்திகள்: Jailer Movie: கடலூரில் மாஸ் காட்டிய தலைவர்..! ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்..!
பிக்பாஸ் வீட்டில், ஜி.பி முத்துவின் விளையாட்டு மிகவும் எதார்த்தமாக உள்ளதால் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின், ஜிபி முத்து ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சமூக வலைதளத்தில் பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tamil cinema update : is back again with " Friendship " director John for another project. Will be a mystery plus dark comedy movie .
The movie will have playing the female role and GP Muthu playing a pivotal role . 70% shoot done !