Mysskin: இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !

By manimegalai a  |  First Published Oct 13, 2022, 8:20 PM IST

இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் - நடிகர் என்பதை தாண்டி ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள, 'டெவில்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 
 


மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும்  S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ ஞானசேகர் தயாரிக்கும் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில்,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வந்த 'டெவில்' படத்தின் படப்படப்பிடிப்பு, தற்போது  முழுமையாக  நிறைவடைந்தது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: தளபதி தந்தைக்கு இந்த நிலையிலா? ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ.சந்திரசேகர்! வைரலாகும் புகைப்படம்!

இதுவரை இயக்குனர் மற்றும் நடிகராக ரசிகர்களால் அறியப்பட்ட மிஷ்கின், இந்த படத்தின் மூலம் ஒரு  இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதால், இவரது இசை எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் அளவிற்கு புதுமையான காட்சிகளுடன் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: Sneha Photos: 40 வயதை கடந்தாலும் மங்காத அழகு..! கணவரை கட்டி பிடித்து... குடும்பத்துடன் குதூகலம் பண்ணும் சினேகா
 

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

click me!