அஜித் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து, ஓஜி சம்பவம் பாடலின் புரோமோ தற்போது வெளியாகி வெறித்தனமான வரவேற்பை பெற்று வருகிறது.
தல அஜித் நடிப்பில், கடைசியாக வெளியான விடாமுயற்சி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், அடுத்ததாக ரிலீஸ் ஆக உள்ள படம் தான் 'குட் பேட் அக்லி'. மார்க் ஆன்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்தின் 63-ஆவது படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் அஜித்துடன் சேர்ந்து இந்த படத்தில், நடிகர் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கூடுதல் சிறப்பாக, சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், அஜித்தின் மனைவி ஷாலினி இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும், அதேபோல் சிம்புவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை குறிவைத்து இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான டீசர் வெறித்தனமான வரவேற்பை பெற்றது. இதில் அஜித்தை ஒரு கெட்டப்பில் அல்ல பல கெட்டப்பில் நடிக்க வைத்து, மிரள வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ரெட் டிராகனாக மாஸ் எண்ட்ரி கொடுத்த அஜித் - வைரலாகும் குட் பேட் அக்லி டீசர்
அவ்வப்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. அதாவது கெட்டவன் ஒருவன் நல்லவராக மாறி வாழ ஆசைப்படும் நிலையில் அவன் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இந்த படம் என கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆகா இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் பரபரக்க துவங்கி உள்ளது. அந்த வகையில் தற்போது, 'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்றுள்ள.... OG சம்பவம் பாடலின் ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில், அவரே இந்த ஓஜி சம்பவம் பாடலை பாடியுள்ளார். இவருடன் சேர்த்து ஆதிக் ரவிச்சந்திரனும் பாடியுள்ளார். வெறித்தனனமா எனெர்ஜிடிக் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது புரோமோவை பார்த்தாலே தெரிகிறது.