Bindu Ghosh Passed Away : ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்த நடிகை பிந்து கோஷ் உடல்நல பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார்.
Bindhu Ghosh Passed Away :தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு ஆகியோரது படங்களில் நடித்த நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். விமலா என்ற பிந்து கோஷ் 1982 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கோழி கூவுது படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு உருவங்கள் மாறலாம், டௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, தூங்காதே தம்பி தூங்காதே என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1992 ஆம் ஆண்டு திரைக்கு வந்த தெலுங்கு படத்தில் நடித்தார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வதியாக வாழ்ந்து வந்தவர் தான் பிந்து கோஷ். சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில் கஷ்டம் தொற்றிக் கொண்டது. இதன் காரணமாக தான் சேர்த்து வைத்த எல்லா சொத்துக்களையும் இழந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதில், உடல நல பாதிப்பும் ஏற்பட்டது. மருத்துவ செலவுக்கு கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். பிந்து கோஷிற்கு 2 மகன்கள். அதில், ஒருவர் தன்னால் கவனித்துக் கொள்ள முடியாது என்று சொல்லி தனியாக சென்றுவிட்டார். 2ஆவது மகன் கவனிப்பில் தான் பிந்து கோஷ் இருந்து வந்தார். என்றாலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு என்று ரொம்பவே கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் நடிகை ஷகீலாவின் உதவியுடன் KPY பாலா பிந்து கோஷை சந்தித்து அவருக்கு ரூ.80 ஆயிரம் கொடுத்து உதவி இருக்கிறார். அதற்உ முன்னதாக நடிகர் விஷால் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. சினிமாவில் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது ரூ.1000 முதல் ரூ.3000 வரையில் சம்பளம் பெற்று வந்துள்ளார். சினிமா மூலமாக கிடைத்த வருமானத்தை வைத்து தான் சொந்தமாக வீடும் கட்டியிருக்கிறார். குடும்ப பிரச்சனை காரணமாக அவருடன் இருந்தவர்கள் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இதையடுத்து அவருக்கென்று யாரும் இல்லாத போது வீட்டைவிற்று வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று உடல்நலம் மோசமான நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.