Hrithik Roshan Krrish 4 Shooting Postponed : கிரிஷ் 4 திரைப்படம்: கிரிஷ் 4 பட்ஜெட்டால் தயாரிப்பாளர் கவலை! படப்பிடிப்பு 2026 வரை தள்ளிப்போக வாய்ப்பு. ரித்திக் மற்றும் ராகேஷ் ரோஷன் ஸ்டுடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரித்திக் ரோஷன் நடிக்கும் கிரிஷ் 4 லேட்டஸ்ட் அப்டேட்: ‘கிரிஷ் 4’ ரித்திக் ரோஷனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. ரசிகர்கள் இந்த படத்துக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால், படம் ஆரம்பிக்கும் முன்னரே பல திருப்பங்கள் ஏற்படுவதால், ரசிகர்களின் காத்திருப்பு இன்னும் நீண்டு கொண்டே போகிறது. இந்த வருடம் படம் ஆரம்பிக்க இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் பயந்து போய் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், படத்தின் ஷூட்டிங் 2026 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரித்திக் ரோஷன் நடிக்கும் கிரிஷ் 4 படத்தில் சிக்கல்!
பாலிவுட் ஹங்காமாவின் அறிக்கையில், ரித்திக் ரோஷனின் ‘கிரிஷ் 4’ படத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடி ரூபாய் வரை எகிறி உள்ளது. எந்த ஸ்டுடியோவும் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்து ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ரித்திக் ரோஷன் தன்னுடைய நண்பர் சித்தார்த் ஆனந்த்தை ‘கிரிஷ் 4’ படத்துக்கான ஸ்டுடியோவை தேர்வு செய்ய சொன்னார். அவரும் இந்த படத்தை தயாரிக்க இருந்தார். ஆனால், இந்தியாவின் பெரிய ஸ்டுடியோக்கள் 700 கோடி ரூபாய் செலவு செய்ய தயங்கினார்கள். மார்வெல் படங்களின் வருகைக்கு பிறகு, ஸ்டுடியோக்கள் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் ‘கிரிஷ்’ படத்தை எடுக்க தயங்குகிறார்கள். ஏனென்றால், ‘கிரிஷ் 3’ வெளியாகி ஒரு தசாப்தத்துக்கு மேல் ஆகிவிட்டது.
சித்தார்த் ஆனந்த் ‘கிரிஷ் 4’ படத்திலிருந்து விலகினார்!
சித்தார்த் ஆனந்த் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான மார்ஃப்ளிக்ஸ் ‘கிரிஷ் 4’ படத்திலிருந்து விலகிவிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரித்திக் ரோஷன் மற்றும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் ஒரு மூடிய அறைக்குள் மீட்டிங் போட்டு, இனி அவர்களே ஸ்டுடியோக்களுடன் பேசலாம் என்று முடிவு செய்துள்ளனர். ‘கிரிஷ் 4’ படத்தை ஃபிலிம்கிராஃப்ட் (ராகேஷ் ரோஷன் மற்றும் ரித்திக் ரோஷனின் தயாரிப்பு நிறுவனம்) மற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. மார்ஃப்ளிக்ஸ் ‘கிரிஷ்’ தவிர மற்ற ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்த உள்ளது.
கிரிஷ் 4 படத்தின் இயக்குனரும் வெளியேறினார்
சித்தார்த் ஆனந்த் நியமித்த கரண் மல்ஹோத்ரா தான் ‘கிரிஷ் 4’ படத்தை இயக்க இருந்தார். ஆனால், சித்தார்த்தே படத்தில் இருந்து விலகியதால், கரணும் விலகுவார் என்று கூறப்படுகிறது. ஒரு புதிய குழு பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்து, படத்தை இயக்க உள்ளது. ரித்திக் ரோஷனின் ‘வார் 2’ படம் வெளியாகி நல்ல வசூல் செய்தால், ‘கிரிஷ் 4’ படத்துக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கும்.