
மகாராஷ்டிராவில் பிறந்திருந்தாலும், கோலிவுட் உலகில் மிகப்பெரிய நடிகையாக இன்றளவும் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. கடந்த 2000வது ஆண்டு வெளியான ஒரு மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சினேகா, அதே ஆண்டு தமிழில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான "என்னவளே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட் உலகில் களமிறங்கினார்.
2000மாவது ஆண்டில் துவக்கத்தில், தமிழில் இவர் நடிப்பில் வெளியான "புன்னகை தேசம்", "விரும்புகிறேன்", "ஏப்ரல் மாதத்தில்", "வசீகரா", "பார்த்திபன் கனவு" மற்றும் "வசூல்ராஜா எம்பிபிஎஸ்" போன்ற படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தவிர தமிழ் திரை உலகில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை சினேகா.
கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் சினேகா. தற்பொழுது இந்த ஜோடிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக கோலிவுட் உலகில் பயணித்து வரும் நடிகை சினேகா இப்போது தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராகவும் சினேகா பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில், பவதாரணி குரலில் ஒலிக்கும் "சின்ன சின்ன கண்கள்" என்கின்ற பாடல் வெளியாகி பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில் அந்த பாடலை பிரசன்னா மற்றும் சினேகாவின் குழந்தைகளை வைத்து ஒரு நிறுவனம் Recreate செய்து, அந்த வீடியோவை நடிகை சினேகாவிற்கு பரிசாக அளித்துள்ள நிலையில், அதை பார்த்த சினேகா மிகவும் சந்தோஷப்பட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.