சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மாஸான அப்டேட் சூர்யா பிறந்தநாளன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் வழங்க ஆயத்தமாகி வருகின்றனர். அன்றைய தினம் சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் முக்கியமாக அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கங்குவா படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 23-ந் தேதி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யே போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சூர்யாவின் கையில் நிறைய தழும்புகள் உள்ளன. அந்த ஒவ்வொரு தழும்பிற்கும் ஒரு கதை இருக்கிறது. அரசன் வருகிறான் என்கிற டேக் லைனையும் படக்குழு குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்.... சூர்யாவுக்கு வில்லன் இவர்தானா?... கங்குவா படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே!
Each scar carries a story!
The King arrives 👑 on 23rd of July! 🦅 pic.twitter.com/CV5iktmMHG
கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் சூர்யாவின் பிறந்தநாளுக்கு செம்ம ட்ரீட் கொடுக்க உள்ளது படக்குழு. கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும், வில்லனாக நட்டி நட்ராஜும் நடிக்கின்றனர். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்கள்... முடிந்தது குக் வித் கோமாளி சீசன் 4 பைனல்ஸ் ஷூட்டிங்... டைட்டிலை தட்டிதூக்கியது இவரா! லீக்கான தகவல்