Pathaan: தீபிகா படுகோனேவுக்கு பயங்கர டஃப்!.. பதான் பட ‘பேஷரம் ரங்’ பாடல் ரீ-கிரியேட் வீடியோ வைரல்!

Published : Feb 08, 2023, 04:19 PM ISTUpdated : Feb 08, 2023, 04:24 PM IST
Pathaan: தீபிகா படுகோனேவுக்கு பயங்கர டஃப்!.. பதான் பட ‘பேஷரம் ரங்’ பாடல் ரீ-கிரியேட் வீடியோ வைரல்!

சுருக்கம்

பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு பெண் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தியில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பதான் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பாலிவுட்டிற்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

படம் வெளியாகுவதற்கு முன்னதாக பதான் படத்தை புறக்கணிக்க கோரி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும் டூயட் பாடுகின்றனர்.

இதையும் படிங்க..பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

இதனால் காவி நிறம் அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பதான் திரைப்படம் இந்துக்களுக்கு எதிரானது எனவும், காவி நிறம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.  பதான் படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனால் பதான் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் உள்ளிட்டோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான பதான் திரைப்படம் இதுவரை ரூ. 850 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலித்திருக்கிறது. பதான் படத்தின் பிரபலமான பாடலான 'பேஷரம் ரங்' பாடலுக்கு ஒரு பெண் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷர்மிளா சாஹா என்ற பெண் கவர்ச்சியாக பட்டையை கிளப்பும் இந்த வீடியோ இதுவரை 5.3 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. அவரது அட்டகாசமான அசைவுகள் சமூக ஊடகங்களில் அனைவரையும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். தீபிகாவின் நடன அசைவுகளை அப்படியே அதே அளவுக்கு கவர்ச்சியையும் தெறிக்கவிட்டிருக்கிறார் ஷர்மிளா சாஹா. இவரது இனித்த வீடியோவுக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டே வருகிறது.

இதையும் படிங்க..Viral Video: தாமிரபரணி ஆற்றில் அசால்ட்டாக ‘டைவ்’ அடித்த வயதான பாட்டி!.. வைரல் வீடியோ !!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!