
'அட்டகத்தி' படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமாகி... 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் பா.ரஞ்சித். சமீப காலமாக சில படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். திறமை இருந்தும், படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் பல இளம் இயக்குனர்களின் கனவை தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம் நிறைவேற்றி வருகிறார் பா.ரஞ்சித்.
இவர் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது.
மேலும் ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை ஏற்கனவே இயக்கிய 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தொடர்ந்து, மீண்டும் 'தண்டகாரண்யம்' என்னும் படத்தை இயக்க உள்ளதாக, இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட அறிவித்துள்ளனர்.
கையில் குழந்தையோடு ஷாருகான்..! அட இது அட்லீ - பிரியா தம்பதியின் மகனா? வைரலாகும் புகைப்படம்..!
இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.