அதிரடி... சரவெடி... 300 கோடி வசூல் கிளப்பில் இணைந்த வாரிசு! உறுதி செய்த படக்குழு ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்..!

By manimegalai a  |  First Published Feb 6, 2023, 7:53 PM IST

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை ஆரவாரத்தோடு கொண்டாடி வருகிறார்கள்.


இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்திருந்த திரைப்படம் 'வாரிசு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், பொங்கல் விருந்தாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும்.. மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்தாலும் வாரிசு திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் வாரிசு திரைப்படம் வெளியான இதே நாளில், நடிகர் அஜித்... வினோத் இயக்கத்தில் நடித்த 'துணிவு' திரைப்படமும் வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நிலையில், இரண்டு படங்களும் மூன்று வாரத்திற்கு மேல் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

மஞ்ச காட்டு மைனாவை போல் மாறி... கியூட் உடையில் கூல் போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜனனி! லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

இந்நிலை ஏற்கனவே துணிவு திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது வாரிசு திரைப்படமும் உலக அளவில் 300 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை தளபதியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

 

 

இந்த வாரம் மைக்கேல், பொம்மை நாயகி, ரன் பேபி ரன் என தமிழில் மட்டும் மொத்தம் ஏழு படங்கள் வெளியானதால், வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுக்கும் தியேட்டர்கள் எண்ணிக்கை  குறைக்கப்பட்டாலும், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது விஜய்யின் 'வாரிசு' 300 கோடி வசூலை எட்டியுள்ள தகவல் தான் சமூக வலைத்தளத்தில்,ம் தளபதி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில்  குறிப்பிடத்தக்கது.

சூர்யா கால்ஷீட் கேட்டு வீட்டுக்கு வந்த இயக்குனரிடம்... அநாகரிகமாக பேசி, கேவலப்படுத்தி அனுப்பினாரா சிவகுமார்?

click me!