Ennu Swantham Sreedharan: இந்து குழந்தைகளை வளர்ந்த முஸ்லீம் தம்பதியின் கதை

By SG BalanFirst Published Feb 6, 2023, 1:39 PM IST
Highlights

கேரளாவில் ஒரு முஸ்லீம் தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளுடன் இந்து குழந்தைகள் மூவரையும் வளர்த்த கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதி தங்கள் வீட்டில் வேலை பார்த்த இந்து பெண்ணின் குழந்தைகளை சொந்தக் குழந்தைகள் போல் வளர்த்து படிக்கவைத்தது ஆளாக்கிய கதை திரைப்படமாக உருவாகியுள்ளது.

கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியான மலையாளப் படம்  ‘என்னு ஸ்வந்தம் ஶ்ரீதரன்’. புகழ்பெற்ற இயக்குநர் சித்திக் பரவூர் இயக்கியுள்ள இந்தப் படம் இப்போது பலரது பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

50 ஆண்டுகளுக்கு முன் சுபைதாவின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர் சக்கி. இவரது கடைசி மகன்தான் ஶ்ரீதரன். இவர் 2019ஆம் ஆண்டு சுபைதா உயிரிழந்தபோது பேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார். அதில் தன் தாய் மறைவுக்குப் பிறகு சுபைதா தன் தாயாக இருந்து தன்னை வளர்த்தது பற்றி உருக்கமாக நினைவுகூர்ந்து எழுதியிருந்தார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுபைதாவுக்கும் அவரது கணவர் அசிஸ் ஹாஜிக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டில் வேலை பார்த்த இந்துப் பெண் சிக்கி இறந்துபோனார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு நடந்த திருமணம்..! வைரலாகும் அழகிய ஜோடிகளின் புகைப்படம்..!

கணவரைப் பிரிந்த வாழ்ந்து வந்த சிக்கியின் இறப்புக்குப் பிறகு அவரது மூன்று குழந்தைகளுக்கும் ஆதரவற்ற நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சுபைதாவும் அவரது கணவர் ஹாஜியும் அந்த மூன்று குழந்தைகளையும் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போலவே பாவித்து வளர்த்தனர்.

சிக்கி இறந்தபின் அவர் வசித்த வீட்டுக்குச் சென்ற சுபைதா அங்கிருந்த மூன்று குழந்தைகளையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். கணவர் ஹாஜியிடம் சிக்கி இறந்துவிட்டதைக் கூறி, குழந்தைகளை தங்கள் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு ஹாஜியும் சம்மதம் தெரிவித்தார்.

முஸ்லீம் குடும்பமாக இருந்தாலும் இருவரும் அந்த மூன்று இந்துக் குழந்தைகளையும் மதம் மாற்றாமல் இந்துக்களாகவே வளர்த்து படிக்க வைத்தனர். இப்போது அவர்களுடைய வாழ்க்கை ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

2019ஆம் ஆண்டு சுபைதா சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அசிஸ் ஹாஜியும் காலமானார்.
வேலையே இல்ல.. கடும் மன உளைச்சல் வேற... அட பாவமே தனுஷூக்கே இந்த நிலைமையா..!

click me!