வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை படத்துக்காக நடிகர் தனுஷ், முதன்முறையாக இளையராஜா இசையில் பாடிய பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் விடுதலை. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல் என அனுபவம் வாய்ந்த இயக்குனர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
விடுதலை படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. அப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது. விடுதலை பட ஷூட்டிங் முழுவதுமாக முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... அடி அழகா சிரிச்ச முகமே... 22-வது திருமண நாளில் காதல் மனைவி ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ
இந்நிலையில், விடுதலை படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற பிப்ரவரி 8-ந் தேதி விடுதலை படத்தின் முதல் பாடலான உன்னோட நடந்தா என்கிற பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து புரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது.
இந்த பாடலின் ஸ்பெஷல் என்னவென்றால், இதனை தனுஷ் பாடி இருக்கிறார். இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இதுவாகும். இதற்காக இளையராஜாவிடம் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து தனுஷ் இப்பாடலை பாடி இருக்கிறார். தனுஷுக்கு இளையராஜா பாட சொல்லிக்கொடுக்கும் காட்சிகள் உடன் கூடிய வீடியோவும் வெளியாகி உள்ளது.
The first single from part 1 releasing on Feb8th
🎼 ⁰
🎤 &
✒️
Promo from the recording session pic.twitter.com/SjrJnXvC6K
இதையும் படியுங்கள்... 3வது முறையாக கிராமி விருதை தட்டித்தூக்கிய இந்திய இசையமைப்பாளர்... யார் இந்த ரிக்கி கேஜ்?