
இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின். இந்த திரைப்படம், ரிலீஸ் ஆகி 20வது ஆண்டை நிறைவு செய்வதை சிறப்பிக்கும் விதமாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் கலை புலி தாணு, 'சச்சின்' படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளார்.
20 வருடங்களுக்கு பின்னர் இப்படம் ரிலீஸ் ஆனாலும் கூட, இப்படி புதிய படத்தை ரசிகர்கள் வரவேற்பார்களோ அதே போல் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள். இதுவரை சுமார், ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காதல் மற்றும் காமெடி கான்செப்டில் வெளியான சச்சின் படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக... ஷாலினி கதாபாத்திரத்தில், நடிகை ஜெனிலியா டி'சோசா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சச்சின் ரீ-ரிலீசுக்கு தளபதி விஜய் ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குட் பேட் அக்லியிடம் சரண்டர் ஆன சச்சின் - ரீ-ரிலீஸ் வசூல் இவ்வளவுதானா?
இந்த வீடியோவில், ஜெனிலியா கூறியுள்ளதாவது:
"வணக்கம் தளபதி ரசிகர்களே! எப்படி இருக்கீங்க? நான் உங்க ஷாலினி... ஆமா, டபுள் ஐ ஷாலினி! 20 வருஷத்துக்குப் பிறகு சச்சின் மீண்டும் தியேட்டரில் வருவதைப் பார்த்து நான் ரொம்பவே சந்தோஷத்தில் உள்ளேன். அதுக்குக் கிடைக்கும் அன்பும் அபாரமானது. அன்றைய வரவேற்பு இன்று போலவே மாயாஜாலமாக இருக்கிறது. உங்க தளபதி... எவ்வளவு இனிமையா இருக்கு! நான் உண்மையிலேயே நெகிழ்ச்சியடைந்தேன். சச்சினை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடியதற்கு என் மனதார நன்றி ." என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.