
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்கு உடந்தை என எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் (NDPS) பிரிவு 27 மற்றும் 29 இன் கீழ் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, நடவடிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 16, 2025: கொச்சி, கலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்பு அதிரடிப் படை (DANSAF) ஹோட்டலில் சோதனை நடத்தியது. ஷைன் டாம் சாக்கோ சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.
ஏப்ரல் 17, 2025: இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சாக்கோவை விசாரணைக்கு அழைத்து காவல்துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
ஏப்ரல் 19, 2025: இதன் பின்னர் சாக்கோ இன்று காலை 10 மணியளவில் எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில், கொச்சி நகர காவல்துறையினர் முன் ஆஜரானார். பல மணி நேர விசாரணை மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அவர் NDPS சட்டத்தின் பிரிவு 27 மற்றும் 29 இன் கீழ் கைது செய்யப்பட்டார்.
போலீசார் விசாரணையின் போது, ஹோட்டலுக்குத் தன்னைத் தேடி வந்தது போலீஸார் என்று அடுத்த நாள் காலையில் தான் தெரிந்ததாக, ஷைன் டாம் சாக்கோ கூறியுள்ளார். அதே போல் போதைப்பொருட்களைத் தான் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அவரது வார்த்தைகளில் முரண்பாடுகள், இருந்த நிலையில் சில டிஜிட்டல் ஆதாரங்களுடன், அவரைக் கைது செய்யும் முடிவை போலீசார் எடுத்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் அவரது வாட்ஸ்அப் சேட் மற்றும் கூகிள் பே பரிவர்த்தனை வரலாற்றை ஆய்வு செய்தனர், இதில் முக்கியமான தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
தடயவியல் விசாரணையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் பயன்பாட்டைத் உறுதி செய்ய, முடி மற்றும் நக மாதிரிகள் அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. சாக்கோ கூடிய விரைவில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுவார் என தெரிகிறது.
2015ல் சாக்கோ மீதான கோகைன் வைத்திருந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எர்ணாகுளம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லாதது மற்றும் எதிர்மறையான போதைப்பொருள் சோதனை முடிவுகளை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்தது.
நடிகரும் முன்னாள் உதவி இயக்குநருமான ஷைன் டாம் சாக்கோ, முதன்மையாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளது. மேலும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் குறிப்பிடத்தக்க தோற்றங்களைக் ஏற்று நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதே போல் தமிழில் சக்கை போடு போட்டு வரும், குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.