
Sachein Re Release : நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின். இப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரனின் மகன் தான் இவர். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். சச்சின் திரைப்படத்தில் வடிவேலு, தாடி பாலாஜி, சுஷ்மிதா சென் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் விஜய்யின் கெரியரில் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
சச்சின் படத்துக்கு போட்டியாக 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் ரஜினி நடித்த சந்திரமுகி படங்களும் ரிலீஸ் ஆகின. இதில் மும்பை எக்ஸ்பிரஸ் அட்டர் பிளாப் ஆனது. சந்திரமுகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சச்சின் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சந்திரமுகி படம் அளவுக்கு அப்படம் வசூலிக்கவில்லை. சச்சின் படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக அப்படத்தை இன்று உலகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய் வீட்டு பெட்ரூமில் நடந்த சாங் ரெக்கார்டிங்; அடடே இந்த சூப்பர் ஹிட் பாட்டு தானா?
விஜய் படங்கள் என்றாலே தியேட்டர்கள் திருவிழா போல மாறிவிடும். அந்த வகையில் சச்சின் படம் ரீ-ரிலீஸையும் விஜய் ரசிகர்கள் புதுப்படம் ரிலீஸை கொண்டாடுவது போல் தடபுடலாக கொண்டாடி உள்ளனர். தியேட்டர்களில் இன்று காலை 9 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர்கள் முன் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்க டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளனர்.
குறிப்பாக மதுரையில் விஜய் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக வந்து அலப்பறை கிளப்பி உள்ளனர். அதேபோல் கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் சச்சின் பட ரீ-ரிலீசை தடபுடலாக கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் ரீ-ரிலீசிற்காக நடிகர் விஜய்க்கு ஸ்பெஷல் டைட்டில் கார்டும் போடப்பட்டு உள்ளது. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வழக்கமாக முதல் ஷோ என்றால் ரசிகர்கள் தான் பெரும்பாலும் வருவார்கள், ஆனால் விஜய்க்கு ரசிகைகளும் அதிகம் என்பதால் சச்சின் பட ரீ-ரிலீசை கொண்டாட பெண்களும் அதிகளவில் திரையரங்குகளுக்கு வந்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் அதற்கு விஜய் ரசிகர்கள் தியேட்டரில் ஆடிப்பாடி வைப் செய்யும் வீடியோக்கள் செம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Vijay Vs Ajith: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் - அஜித் படங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.