
AI தொழில்நுட்பம் உலகெங்கும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்திலேயே ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அது தமிழில் உருவாக்கப்படவில்லை. கன்னட திரையுலகில் தான் உலகிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில், 'லவ் யூ' என்கிற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் ரூ.10 லட்சம் தானம்.
இந்தப் படத்தை இயக்குநர் நரசிம்ம மூர்த்தி இயக்கியுள்ளார். AI பணிகளை நூதன் என்பவர் மேற்கொண்டுள்ளார். இவர்கள் தவிர நடிப்பு, இசையமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, டப்பிங் என அனைத்தையும் AI தொழில்நுட்பமே கையாண்டுள்ளது. இந்தப் படத்தை இயக்கித் தயாரித்த நரசிம்ம மூர்த்தி, பெங்களூருவில் உள்ள பாகலகுண்டே ஆஞ்சநேயர் கோயிலின் அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஓரிரு படங்களை இயக்கியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி 'லவ் யூ' படத்திற்காக AI பணிகளை மேற்கொண்டுள்ள நூதன், சட்டம் பயின்றவர். கடந்த சில ஆண்டுகளாக கன்னட சினிமாவில் துணை இயக்குநர், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். காலத்திற்கு ஏற்ப சினிமா உலகில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் இப்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் AI தொழில்நுட்பம் கொண்டு படம் இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில், AI தொழில்நுட்பம் கற்று இந்தப் படத்தின் தொழில்நுட்ப பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டிருக்கின்றனர்.
லவ் யூ படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ் நரசிம்ம மூர்த்தி கூறியிருப்பதாவது: இந்தப் படம் 95 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளது. இந்தப் படத்தில் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. தணிக்கை குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தத் திரைப்படத்திற்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். எங்களைத் தவிர நடிப்பு, இசையமைப்பு, பின்னணி என்று நூற்றுக்கணக்கானோரின் பணிகளை AI செய்துள்ளது. லவ் யூ படத்தில் நிஜத் திரைப்படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன. டிரோன் ஷாட்களும் உள்ளன.
திரைப்படம் தயாரிக்கும்போது சில தொழில்நுட்பச் சவால்களும் ஏற்பட்டன. நாங்கள் 'ஓல்டு மேன்' என்று தேடினால், 10,000-க்கும் மேற்பட்ட வயதானவர்களின் படங்கள் வந்து விழும். அதில் சிறந்த 10 படங்களை AI தேர்ந்தெடுக்கும். அதில் எங்களுக்குத் தேவையான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கதாபாத்திரங்களின் தொடர்ச்சியிலும் சவால்கள் இருந்தன. கதாபாத்திரங்கள் நடக்கும், ஓடும் வேகத்தையும் குறிப்பிட வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்தில் AI மேலும் வலுவடைந்துள்ளதால், தேர்வுகள் எளிதாகிவிட்டன' என்றார்.
AI தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்ட நூதன் கூறியிருப்பதாவது: 'AI ரன்வே ML, கிளிங் AI, மினி மேக்ஸ் உள்ளிட்ட 20 முதல் 30 கருவிகளைப் பயன்படுத்தியுள்ளோம். திரைப்படத்தைப் பார்த்தவர்கள் சாதாரணத் திரைப்படத்தை விடவும் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர்'. இந்தத் திரைப்படம் மே மாதத்தில் திரைக்கு வரவுள்ளது.
இந்த படத்தை இயக்கிய நரசிம்ம மூர்த்தி மற்றும் AI பணிகளை மேற்கொண்ட நூதன் ஆகியோரைத் தவிர, நடிப்பு, இசை அமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, டப்பிங் என அனைத்தையும் AI தொழில்நுட்பமே கையாண்டுள்ளது.
இசை, பாடல், டப்பிங் அனைத்தையும் செய்தது AI. வெறும் 10 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படம் தான் 'லவ் யூ' திரைப்படம். வரும் மே மாதம் படம் வெளியாக இருக்கிறது.
உலகிலேயே முதன்முறையாக வெறும் 10 லட்ச ரூபாயில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் 'லவ் யூ' என்ற படம் கண்டிப்பாக கன்னட பட உலகில் ஒரு புரட்சியை உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபமா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.