
'Jananayagan' Vijay: Latest Viral Video! நடிகர் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படம் பொங்கல் வெளியீடாக 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த படம் 2025 அக்டோபரில் வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது. விஜய்யின் திரை வாழ்க்கையில் இது கடைசி படம். இதன் பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். எனவே, விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். எச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் பின்னணியில் உருவாகி உள்ளது.
ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணன் தயாரிக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோகித் என்.கே ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி உள்ளனர். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... 'ஜனநாயகன்' படத்தின் கதைக்களம் இதுவா? அரசியலுக்கு திரைப்படம் மூலம் பக்கா ஸ்கெச் போட்ட தளபதி!
வி.செல்வகுமார் கலை இயக்குனராகவும், சேகர் மற்றும் சுதன் நடன இயக்குனர்களாகவும் பணியாற்றி உள்ளனர். அறிவு பாடல் வரிகளை எழுதுகிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பாளராகவும், நாகராஜா ஒப்பனை கலைஞராகவும் பணியாற்றி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மே மாதத்திற்குள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள டி.ஆர்.கார்டனில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு குவிந்தனர். இதை அறிந்த நடிகர் விஜய், தன்னைக் காண குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். அப்போது கண்ணாடி அணிந்து புது லுக்கில் செம ஸ்மார்ட் ஆக காட்சி அளித்தார் விஜய். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சூடுபிடித்த ஜன நாயகன் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ்; ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடும் தளபதி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.