Gautham menon : நானும், ஜெயமோகனும் தயார் செய்த ஸ்கிரிப்ட்டில் மல்லிப்பூ பாடலே கிடையாது என வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு - இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி ரிலீசான படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். ஜெயமோகனும், கவுதம் மேனனும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.
வழக்கமாக காதல் படங்களையே இயக்கி வந்த கவுதம் மேனன், இப்படத்தின் மூலம் புது ரூட்டுக்கு சென்றுள்ளார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இதனை உருவாக்கி இருந்தார். அவரின் இந்த புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சிகிச்சைக்கு பணமின்றி தவித்த பழம்பெரும் நடிகை.. விஷயம் தெரிஞ்சதும் நேரில் வந்து உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்
sucess celebration 😍❣️ pic.twitter.com/ahXcrISYVm
— AmuthaBharathi (@CinemaWithAB)வெந்து தணிந்தது காடு படத்தில் ஹைலைட்டாக பார்க்கப்பட்ட விஷயம் என்றால் அது அப்படத்தில் வரும் மல்லிப்பூ என்கிற பாடல் தான். சீரியஸாக செல்லும் படத்தில் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் அப்பாடலை படத்தில் வைத்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், மதுஸ்ரீயின் குரலில் உருவான இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் முதலில் கவுதம் மேனனும், ஜெயமோகனும் தயார் செய்த ஸ்கிரிப்ட்டில் இந்த பாடலே கிடையாதாம். இப்பாடல் படத்தில் வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தானாம். அவர் தான் இப்பாடலுக்கான ஐடியாவை கவுதம் மேனனுக்கு கொடுத்தாராம். இந்த சுவாரஸ்ய தகவலை சென்னையில் நேற்று நடைபெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில் சொன்ன கவுதம் மேனன், அப்பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்து ஏ.ஆர்.ரகுமானையே சேரும் என பெருமிதத்துடன் கூறினார்.
இதையும் படியுங்கள்... ஒருவழியாக முடிவுக்கு வந்தது பைக் ட்ரிப்... வைரலாகும் அஜித்தின் அன்சீன் கிளிக்ஸ் இதோ