
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் தனித்தனியாக போட்டுக்கொடுப்பது தான் வழக்கம். ஆனால் கடந்த எபிசோட்டில் கஞ்சா கருப்பு ஒருபடி மேலே போய் பிக்பாஸையே கலாய்கிறார்.
நிகழ்ச்சியில் பிக்பாஸ் அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு அழைக்கிறார். அப்போது பிக்பாஸ் அவ்ர்களை பார்த்து , நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பழமொழி டாஸ்கில் தோற்றுவிட்டீர்கள். சிலர் வரைமுறைகளை மீறியதால் பட்ஜெட் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவரும் 10 நாட்களுக்கு மேல் தங்கியும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை. இதனால் பழமொழி டாஸ்க் ரத்து செய்யப்பட்டு பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளதாக பிக்பாஸ் தெரிவிக்கிறார்.
இதைக்கேட்ட நடிகர் நடிகைகள் சிலர் சிரித்துக்கொண்டும் சிலர் மவுனம் காத்துக்கொண்டும் சிலர் ஷாக்கில் இருந்தது போன்றும் காண்பிக்கப்படுகிறது. இதை கேட்ட கஞ்சா கருப்பு நாங்க என்ன ஸ்கூல் பிள்ளைகளா பெல் அடித்து ஸ்கூலுக்கு போ என்று சொல்றீங்க என கலாய்த்தார்.
இதைக்கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால் சினேகன் மட்டும் சிரிக்கவும் முடியாமல் சிரிப்பை அடக்கவும் முடியாமல் தலையில் கையை வைத்து தத்தளிக்கிறார். தொடர்ந்து பேசிய கஞ்சா கருப்பு என் வாழ்க்கையில இப்படி நான் பள்ளி கூடத்திற்கு போனதே இல்ல என்றார்.
தொடர்ந்து இங்க வந்ததுக்கு மலேசியா போயிருந்தா கூட சீட்டு ஆடி சம்பாதித்து இருப்பேன் என்று சொல்ல அதை வையாபுரி ஆமா , கேரளா போயிருந்தா கூட சம்பாதிச்சிருப்போம் என்று சொல்ல , என்ன மலேசியாவுல கூப்பிட்டாங்க கனடாவுல கூப்பிட்டாங்க என்னோட கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன் என கேமிராவை பார்த்து பார்த்து வான்டடாக வரிந்து கட்டி பேசினார். இதைக்கேட்ட அங்கிருந்தோர் கைகொட்டி சிரித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.