"நான் வீட்டுக்கு போறேன்.." - கதறி அழுத ஜூலி... மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்…

 
Published : Jul 06, 2017, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"நான் வீட்டுக்கு போறேன்.." - கதறி அழுத ஜூலி... மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்…

சுருக்கம்

julie crying in bigg boss

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

இதில் நடைபெறும் கூத்துகளை நெட்டிசன்கள் வீடியோக்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தில் இருந்தே ஜூலியை ஆர்த்தி காயத்திரி ரகுராம் மற்றும் நமீதா ஆகியோர் கலாய்த்து வந்தனர். இதை ஜீலி கண்டும் காணாதது போல் சமாளித்து வந்தார். அவர்கள் கலாய்க்கும் போது அமைதியாகவும் சிரித்து பேசும் போது நெருங்கி பழகியும் இருந்து வந்தார். புதிதாக ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்த ஜூலி தன்னுடன் இருந்த சக நடிகைகளை அக்கா என்ற வார்த்தை மாறாமல் அழைத்து வந்தார்.

 இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ தொலைகாட்சியில் வெளியானது. அதில் ஜூலி காயத்திரியை பார்த்து இங்க பாருங்க உங்களை மாதிரி டிஆர்பி ரேட்டுக்காக நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த காயத்திரி அக்கா என்று பேசு எப்போதும் ஒரேமாதிரியாக இரு. இதுமாதிரி எங்கிட்ட வச்சுகிட்டின்னா செம அடிவாங்குவ. என ஆக்ரோஷமாக கூறினார்.

 இதனால் மனம் உடைந்த ஜூலி பிக்பாஸ் கேமிராவிடம் சென்று நான் வீட்டுக்கு போகணும் , இப்பவே போகணும்,  போய் பேக் பண்றேன் என்று ஸ்கூல் குழந்தை போல் அடம் பிடித்து செல்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய ரஜினி, பிரதீப்... இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியல் இதோ
கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்