"என்னிடம் வைத்துக்கொண்டால் அவ்வளவுதான்" - ஜூலியை மிரட்டிய காயத்ரி... பிக் பாஸ் சுவாரஸ்யம்!

 
Published : Jul 06, 2017, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
"என்னிடம் வைத்துக்கொண்டால் அவ்வளவுதான்" - ஜூலியை மிரட்டிய காயத்ரி... பிக் பாஸ் சுவாரஸ்யம்!

சுருக்கம்

gayathri warning julie in bigg boss

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. நேற்று உரசிக்கொண்டவர்கள் இன்று பட்டாசாக வெடிக்கிறார்கள். டி.ஆர்.பிக்காக செய்கிறார்களா? உண்மையாகவே அப்படி நடக்கிறார்களா எனபது பிக் பாஸுக்கே வெளிச்சம்.

இன்றைய நிகழ்ச்சியில் ஜூலியானைவை கட்டிபிடித்து கொஞ்சிக்கொண்டிருந்த காயத்ரி கடுமையாக மிரட்டும் காட்சி வெளியானது.

ஜூலி அழுதுகொண்டே தற்போது பிக் பாஸ் குடும்பத்திற்கு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம், இரண்டு நாட்களுக்கு முன்  ஜூலியை அழைத்து நடிக்காதே, நடித்தால் இங்கு நிலைக்க முடியாது என கூறி செம டோஸ் விட்டதால் ஜூலி அழுதது வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர்களது சண்டை மேலும் காரசாரமாகியுள்ளது. 

மீண்டும் ஜூலியை குறிவைத்து  காயத்ரி ரகுராம் சண்டைக்கு இழுத்தபோது, டிஆர்பி க்காக உங்களை போல் என்னால் நடிக்க முடியாது என்று அழுத்தபடியே சத்தம் போட்டார் ஜூலி , அதற்கு ஜூலியை அடிப்பது போல் அவருக்கு நெருக்கமாக சென்ற காயத்ரி என் கிட்ட வச்சிக்காதே , வச்சிகிட்ட அவ்வளவுதான் என்று கடுமையாக எச்சரித்தார்.

இதனால் அழுதபடி இருந்த ஜூலி வேகமாக வந்து, கேமராவை பார்த்து நான் இப்போதே வீட்டிற்கு போக வேண்டும் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது என கூறி கதறி அழுதார்.

பின்னர் வேகமாக திரும்பி சென்றார். இதனால் ஜூலி தானாக கோபித்துக்கொண்டு வெளியே செல்வாரா? அல்லது பரபரப்பை கூட்டவா என்பதை போகப்போகத்தான் பார்க்கவேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்