ட்ரைலருகே இப்படியா? 'கேம் சேஞ்சர்' நாயகன் ராம் சரணுக்கு 256 அடி கட்டவுட் வைத்து மிரட்டும் ரசிகர்கள்!

By manimegalai a  |  First Published Dec 30, 2024, 1:19 PM IST

ராம்சரண் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் டிரைலர், புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்காக பிரம்மாண்ட கட்டவுட் வைத்து ரசிகர்கள் மிரள வைத்துள்ளனர்.


பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 'இந்தியன் 2' படுதோல்வியை சந்தித்தது.

இந்தியன் 3 திரைப்படத்தின் ட்ரைலரை, ஏற்கனவே சங்கர் வெளியிட்டு விட்டதால் இந்த படம் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு வெற்றியை தருமா? என்கிற எதிர்பார்ப்புகள் எழுதுள்ளது.  இரண்டாம் பாகத்துடன் ஒப்பிடும்போது இந்தியன் 3 ட்ரெய்லர் அருமையாக இருப்பதாகவே ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர் அடுத்த ஆண்டு இந்தியன் 3 வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக ராம் சரணை வைத்து சங்கர் இயக்கியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாக உள்ளது.

Tap to resize

Latest Videos

சீரியலில் கொட்டும் பணம்! புதிய கார் வாங்கிய தாமரை செல்வி - எத்தனை லட்சம் தெரியுமா?

அவ்வப்போது இந்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டு வரும் பட குழுவினர், நேற்றைய தினம் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் ராம் சரண் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், ராம்சரண் நடித்துள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. மேலும் இந்த திரைப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ராம் நந்தன் ஐஏஎஸ் என்கிற கதாபாத்திரத்திலும், அவருடைய அப்பா கதாபாத்திரத்தையும் இவரே ஏற்று நடத்துள்ளார். மேலும் அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், மகன் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

'விடாமுயற்சி'யை முடித்த கையேடு 'குட் பேட் அக்லீ' படத்தின் அடுத்த கட்ட பணியில் இறங்கிய அஜித்!

மேலும் சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், பிரவீனா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் ஜனவரி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் லான்ச் ஜனவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ராம் சரணுக்கு ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில், பிருந்தாவன் காலனி என்கிற இடத்தில் சுமார் 256 அடிக்கு ராம் சரணுக்கு கட்டவுட் வைத்துள்ளனர். இந்த கட்டவுட் குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

click me!