ஸ்நேக் பாபுவாக மாறிய டிடிஎப் வாசன்; பாம்பு வளர்ப்பதால் வெடித்த சர்ச்சை

Published : Dec 30, 2024, 12:00 PM IST
ஸ்நேக் பாபுவாக மாறிய டிடிஎப் வாசன்; பாம்பு வளர்ப்பதால் வெடித்த சர்ச்சை

சுருக்கம்

சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வரும் டிடிஎப் வாசன், புதிதாக பாம்பு ஒன்றை வாங்கி வளர்த்து வருவதாக யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பைக் சாகச வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் பேமஸ் ஆனவர் டிடிஎப் வாசன். இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தொடர்ந்து அதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் படையையே சேர்த்து வைத்திருக்கிறார் வாசன். கடந்த ஆண்டு இவர் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமின்றி அவரது ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

சுமார் ஒரு மாத சிறைவாசத்துக்கு பின் ரிலீஸ் ஆன வாசன், தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ஐபிஎல் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. சினிமாவில் நடித்து வருவதால் சில ஆண்டுகளாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்த வாசன், நேற்று தான் புதிதாக பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பாம்பை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வனத்துறை ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

இதையும் படியுங்கள்... டிடிஎப் வாசனின் காதலி ஷாலின் சோயா சொன்ன குட் நியூஸ்- குவியும் வாழ்த்து

ஆனால் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் அந்த வீடியோவின் தொடக்கத்திலேயே விளக்கம் அளித்துள்ளார் வாசன். நம் நாட்டில் உள்ள பாம்புகளை தான் வீட்டில் வளர்க்க முடியாது எனவும், தான் வாங்கியுள்ளது வெளிநாட்டு பாம்பு, அதை வீட்டில் வளர்க்க அனுமதி உண்டு. மேலும் இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றே தான் பாம்பை வீட்டில் வளர்த்து வருவதாக வாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பாம்பை தொடர்ந்து பறக்கும் அணில், அரியவகை குரங்கு ஒன்றையும் தான் வாங்க இருப்பதாகவும் வாசன் தெரிவித்துள்ளார். அவருக்கு விதவிதமான விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதை நிறைவேற்றும் விதமாக தான் தற்போது பாம்பு வாங்கி வளர்த்து வருவதாக வாசன் தெரிவித்துள்ளார். அந்த பாம்புக்கு செல்லமாக பப்பி என பெயரிட்டிருக்கிறார் வாசன். மேலும் அந்த பாம்பை தன் கழுத்தில் போட்டு விளையாடும் வீடியோவையும் வாசன் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. வாசனிடம் பாம்பு வளர்ப்பதற்கான முறையாக லைசன்ஸ் இருந்தாலும் அவர் அதை துண்புறுத்தும் விதமாக கையாண்ட காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் வாசன்.

இதையும் படியுங்கள்... பூட்டை உடைத்த புள்ளிங்கோ; டிடிஎப் வாசன் கடையில் நடந்த திருட்டு - ஷாக்கிங் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!