Viduthalai 2 Success Meet : வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிலையில், அதில் சூரி, விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அவர் சூரியை கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதியை கதாநாயகனாகவும் வைத்து இயக்கிய திரைப்படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை கடந்த டிசம்பர் 20ந் தேதி திரைக்கு கொண்டு வந்துள்ளனர். இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விடுதலை முதல் பாகத்தில் சூரியின் குமரேசன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்த வெற்றிமாறன், அதன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதி நடித்துள்ள பெருமாள் வாத்தியார் கேரக்டரை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார். இப்படத்திற்கும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை பக்கபலமாக இருந்தது. இந்த படத்தை எல்ரெட் குமார் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளார்,
இதையும் படியுங்கள்... சிங்கத்திடம் சரண்டர் ஆன வெற்றி; வசூலில் விடுதலை 2-வை ஓவர்டேக் பண்ணிய முஃபாசா!
விடுதலை 2 படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், முதல் பாகம் அளவுக்கு இல்லை என்பதே ஆடியன்ஸின் கருத்தாக உள்ளது. இதனால் ஒரே வாரத்தில் விடுதலை 2 படத்தின் வசூல் மளமளவென குறைந்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வெற்றிமாறன் இயக்கிய படங்களில் இப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்திக்கும் படமாக இருக்கும் என பேச்சு அடிபட்டு வந்த நிலையில், நேற்று விடுதலை 2 படக்குழு அப்படத்தின் சக்சஸ் மீட்டை கொண்டாடி உள்ளனர்.
விடுதலை 2 படத்தின் வெற்றி விழாவில் அப்படத்தின் ஹீரோக்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் வெற்றிமாறன் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள், படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆளுயர மாலையை வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின்றன.
இருப்பினும் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இந்த வெற்றி விழாவில் ஆப்செண்ட் ஆனது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அவர்கள் பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டாலும் விடுதலை 2 படத்தின் ரிசல்ட் தெரிந்து இதற்கு ஏன் வெற்றிவிழா என புறக்கணித்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 2024- வில்லன் நடிப்பில் மிரட்டிய 5 நடிகர்கள்! யார் யார் தெரியுமா?