
கண்ட நாள் முதல் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா கசெண்ட்ரா. இதையடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரெஜினா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ தந்திரம், சரவணன் இருக்க பயமேன், லோகேஷ் கனகராஜின் மாநகரம் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடினார். இதையடுத்து வில்லியாக அவதாரம் எடுத்த ரெஜினா, விஷாலின் சக்ரா படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். அதைப்பார்த்த இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தை வைத்து தான் இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் ரெஜினா கசெண்ட்ராவை வில்லியாக நடிக்க வைத்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... அட்ரா சக்க; 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்! அஜித்துடன் வெளியிட்ட வேற லெவெல் போட்டோ!
விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் நடிகை ரெஜினா கசெண்ட்ரா தான் மதம் மாறியது பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் பேசியதாவது : “என் அம்மா கிறிஸ்தவர், என் அப்பா முஸ்லிம்... இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் நான் முஸ்லிம் பெண்ணாகவே வளர்ந்தேன். நான் பிறந்து 6 வருடங்களுக்கு என்ன வேறு பெயரில் அழைத்தார்கள்.
அதன்பின்னர் என்னுடைய பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்ததால் நான் என் தாயுடன் சென்றுவிட்டேன். என் தாய்க்கு இஸ்லாமிய மதம் பற்றி தெரியாது. அதனால் என்னை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற சொன்னார். அதன்பிறகு தான் சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றும் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினேன். அப்போது தான் என் பெயர் ரெஜினா கசெண்ட்ரா என மாற்றப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி சவகீதா என்றால் மலாய், தாய் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? ஆண்டனி தாசன் விளக்கம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.