மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர் இரண்டு நாட்களாக அறையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அண்மையில் அந்த ஹோட்டலுக்குச் சென்ற மர்மமான முறையில் இறந்துள்ளார். அவருக்கு 47 வயது.
நடிகர் திலீப் சங்கர் மலையாளத்தில் சினிமாவிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 2 நாட்கள் அறையிலேயே இருந்த அவர், வெளியே வரவே இல்லை என்று கூறப்படுகிறது. அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து உள்ளே சென்று பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதலில், பல முறை கதவைத் தட்டி அழைத்தபோதும் உள்ளே இருக்கும் திலீப்பிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் ஹோட்டல் ஊழியர்கள் தாங்களே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். அங்கு திலீப் சங்கர் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அசைவில்லாமல் படுத்திருப்பதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உள்ளூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.