கப்பலில் வந்த விக்னேஷ்வரன் கருப்புசாமியின் ஃபாரின் சரக்கு!

Published : Jul 08, 2022, 10:59 AM ISTUpdated : Jul 08, 2022, 11:06 AM IST
கப்பலில் வந்த விக்னேஷ்வரன் கருப்புசாமியின் ஃபாரின் சரக்கு!

சுருக்கம்

சுமார் 300 பேர் ஃபாரின் சரக்கு  படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளதாக இயக்குனர் விக்னேஸ்வரன்  கூறியுள்ளார்'. மேலும் இயக்குனர் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படத்தின் கதை என தெரிவித்திருந்தார்.

ஃபாரீன் சரக்கு தயாரிப்பு பணிகள் முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) படம் திரைக்கு வந்துள்ளது. கோபிநாத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர். மேலும் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் நெப்டியூன் சைலர்ஸ் பேனரின் கீழ் கோபிநாத் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். விக்னேஸ்வரன் குப்புசாமி என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார். 

மேலும் விக்னேஸ்வரன்  இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு, இணை தயாரிப்பாளராகவும் பங்கேற்றுள்ளார்.  முன்னதாக நண்பர்களான இயக்குனரும், நடிகரும் கப்பலில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். இதன் பின்னர் சினிமா இயக்கும் ஆர்வத்தில் இவர்கள் முதலில் குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். பின்னர் தான் ஃபாரீன் சரக்கு படத்திற்கான திட்டம் உருவாகியுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு...அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

நண்பர்களின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாசமீபத்தில் சென்னையில்  நடைபெற்றது.அப்போது பேசிய இயக்குனர்; வெளிநாட்டு மது என்பது போல கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் படத்தைப் பார்த்த பிறகு பார்வையாளர்களின் கருத்து மாறும். இது ஒரு அதிரடி பொழுதுபோக்கு படமாக இருக்கும். புதுமுகங்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த படம். 

மேலும் செய்திகளுக்கு...இன்று திரையரங்குகளில் யோகி பாபுவின் பன்னிக்குட்டி! முன்னதாக வெளியான அப்டேட்டுகள்!

 தங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 300 பேர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானதாக கூறியுள்ள இயக்குனர் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்தப் படத்தின் கதை என தெரிவித்திருந்தார். 

பின்னர் வெளியான ட்ரைலரில் 500 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பொருள் சட்டத்திற்கு புறம்பாக கரையேறுகிறது. இதை அடைய பலரும் திட்டம் போடுகின்றனர். அதில் நாயகனின் குழுவும் உள்ளது. தீயவர்களின் வலையில் அந்த பொருள் சிக்குமா? அல்லது நல்லவர்களிடம் கிடைக்குமா? என்பதே இந்த படத்தின் கதைக்கருவாக  இருக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு...கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது