அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

Published : Jul 07, 2022, 09:28 PM IST
அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

சுருக்கம்

150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று விஜயின் அரபிக் குத்து பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற போதிலும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வெற்றி களிப்போடு பீஸ்டில் ஒப்பந்தமானார் நெல்சன் திலீப்குமார். இவர் முன்னதாக இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்கள் பிளாக் காமெடியாக அமைந்து பீஸ்ட் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. அதோடு படத்திலிருந்து வெளியான விஜயின் போஸ்டர் பிளாக் பேப்பர் ஸ்டைலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு... விக்ரம் ஒரிஜினல் பிஜிஎம்மை வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத்!

தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே இந்த படம் மூலம் மறு பிரவேசம் செய்தார். இவர்களுடன் விடிவி கணேஷ் , யோகி பாபு உள்ளிட்டோரும் டாக்டர் பட டீமும் இணைந்து கலக்கி இருந்தனர். சோல்ஜராக இருந்த  விஜய், ஒரு மாலுக்கு விடிவி கணேஷ் கம்பெனி சார்பாக செக்யூரிட்டி பணிக்கு செல்கிறார். பின்னர் அங்கு தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அறிந்த நாயகன் அவர்களிடம் மாட்டிக்கொண்ட மக்களை எவ்வாறு காப்பாறுகிறார் என்பதே படத்தின் கதையாகும். 

மேலும் செய்திகளுக்கு... மீண்டும் டீச்சராகா சாய் பல்லவி..இந்தமுறை வேற லெவல் த்ரில்லரில்..சூர்யா வெளியிட்ட கார்கி ட்ரைலர்!

ஒரு மாலில், காதல், ஆக்சன், எமோஷன், காமெடி என எல்லாவற்றையும் கொடுத்து விட்டார் நெல்சன். இருந்தும் படம் சுமார் 250 கோடியை மட்டுமே வசூலித்தது. படத்தின் பட்ஜெட் 150 கோடியாக இருந்தது. அந்த சமயத்தில் யாசின் கேஜிஎப் 2 வெளியானதே வசூல் குறைய காரணம் என சொல்லப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..விஜய் மனைவியின் சகோதரி யார் தெரியுமா?..வைரலாகும் போட்டோஸ்..

இந்நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் அரபிக் குத்து மாஸ் வெற்றி கண்டது. பட்டி தொட்டியெல்லாம் பரவிய இந்த பாடலுக்கு திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ரீல்ஸ் செய்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி இத்தனை மாதங்களுக்கு பிறகும் இந்த பாடலின் மவுசு குறையவில்லை . தற்போது இந்த பாடம் 150 மில்லியனை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

 

தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ரஷ்மிக்கா மந்தன்ன நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு படத்தின் மூன்று லோக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்
ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது