இன்று திரையரங்குகளில் யோகி பாபுவின் பன்னிக்குட்டி! முன்னதாக வெளியான அப்டேட்டுகள்!  

By Kanmani PFirst Published Jul 8, 2022, 10:00 AM IST
Highlights

 கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.  படத்தின் ரிலீஸ் தேதி ட்ரைலர் வெளியாகி இரண்டு வருடங்கள்  கழித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

யோகி பாபு இல்லாமல் படங்கள் இல்லை என்னும் அளவிற்கு எந்த படம் வந்தாலும் அதில் யோகி பாபு கட்டாயம் இடம் பெறுகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் நீண்டகால படப்பிடிப்பில் இருந்த படம் தான் பன்னிக்குட்டி இந்த படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பன்றி குட்டியை சுற்றி சூழலும் கதை கருவி கொண்ட இந்த படத்தை கிருமி புகழ் அனுசரன் இயக்கியுள்ளார். நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இதில் திண்டுக்கல் லியோனி, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சிங்கம் புலி மற்றும் பல முக்கிய வேடங்களில் நடத்துனர்.

 இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. இருந்தும் இதன் ரிலீஸ் செய்தியோ அல்லது ட்ரைலர், ஆடியோ குறித்தோ எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. பின்னர்  கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.  படத்தின் ரிலீஸ் தேதி ட்ரைலர் வெளியாகி இரண்டு வருடங்கள்  கழித்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?

 

இந்த படத்தின் டிரைலரில் படம் முழுவதும் ஒரு பன்றியை நாயகர்கள் விரட்டுவது போன்ற காட்சியும் ஒரு பன்றி குட்டிக்காக அடித்துக் கொள்வது போன்ற காட்சிகள்  இடம் பெற்று இருந்தது. 90 வினாடிகள் உள்ள இந்த ட்ரெய்லர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபு மற்றும் கருணாகரன் ஒரு பன்றி குட்டியை பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டியிருந்தது. காரணம் இருவரும் அந்த பன்றி குட்டியை உரிமை பெற சண்டையிடுவது தான்.

மேலும் செய்திகளுக்கு...கணவர் இறந்து ஒரு வாரமே ஆகும் நிலையில்... மீனா பற்றி வெளியான இப்படி ஒரு வதந்தி! சொல்லியும் கேட்கலையே..!

 

இந்த படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்திருந்தார் இதற்கு முன் இவர் கிருமி மற்றும் விஜய் சேதுபதி ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து நேற்று லிரிக்கல் வீடியோ வெளியானது. பன்னிக்குட்டி பாடுவது போன்ற சித்தரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை ப்ரணிதி பாடியுள்ளார். கே இசையில், ஞானகரவேல் வரிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

 

படக்குழுவை பொறுத்தவரை  இயக்குனர் - அனுசரண், திரைக்கதை - ரவி முருகையா , எடிட்டிங் - அனுசரண்,  ஸ்டண்ட் - ஃபயர் கார்த்தி,  முருகன்- ஸ்டில்ஸ், டிசைனர் -கண்ணதாசன், கலை இயக்குனர் - என்.ஆர்.சுகுமாரன், ஆடியோகிராபி - எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,  வண்ணம் -நவீன் சபாபதி, தயாரிப்பாளர் - லைகா புரொடக்ஷன்ஸ்.

click me!