
போர்ப்ஸ் டாப் 10 தென்னிந்திய பிரபல நடிகர்களில் ராஷ்மிகா மந்தனா தனுஷ், விஜய் சேதுபதியை தள்ளி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிகை புகழ்வாய்ந்த ஒன்று. இந்த பத்திரிகையானது இந்தியாவில் மிகவும் செல்வாக்குமிக்க திரையுலக பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் அவரை பாலோ செய்பவர்களின் வளர்ச்சி விகிதம், கடைசி 25 பதிவுகளுக்காக அவர் பெறப்பட்ட லைக்குகள், கமெண்ட்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பட்டியலில் 2வது இடத்தில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளார். கேஜிஎப் யாஷ் 3வது இடத்திலும், சமந்தா 4வது இடத்திலும் உள்ளனர். அதன்பிறகு அல்லுஅர்ஜூன் 5வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்த போர்ப்ஸ் பட்டியலில் தனுஷ் 13வது இடத்திலும், விஜய் சேதுபதி 29வது இடத்திலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.