'யசோதா' ஃபர்ஸ்ட்லுக்...எதிர்பார்ப்பை எகிறவிடும் கெட்டப்பில் சமந்தா

Kanmani P   | Asianet News
Published : May 05, 2022, 01:30 PM IST
'யசோதா' ஃபர்ஸ்ட்லுக்...எதிர்பார்ப்பை எகிறவிடும் கெட்டப்பில் சமந்தா

சுருக்கம்

சமந்தா தற்போது நடித்து வரும் யசோதா படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.  

தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நாயகிகள் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்து இருந்தாலும், நான் ஈ படத்தின் மூலம் உலக நாயகியாகி விட்டார் சமந்தா.நான் ஈ படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியானது. இதன் பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களான  சூர்யா, விஜய் உள்ளிட்டோர் உடன் ஜோடி போட்டு குடும்ப குத்துவிளக்காக ரசிகர்கள் மனதில் நிலையாக நின்று விட்டார் சமந்தா.

அதோட தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நாயகியானார். அங்கு பிரபல நாயகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. இவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. நான்கு வருடங்கள் மட்டுமே ஒரு காதல் கதை தொடர்ந்தது. இதற்கிடையில் நட்சத்திர தம்பதிகள் ரொமான்ஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஏகபோக வரவேற்பு இருந்தது. புகைப்படங்கள் போலவே பகிர்ந்து இவர்களது விவாகரத்து செய்தியும் வைரலானது. கடந்த ஆண்டு துவக்கத்தில் இருவரும் மனமுவந்து பிரிவதாக பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தனர்.

முன்னதாக திருமணத்திற்குப் பிறகு தனது பாதையை வெகுவாக மாற்றிக் கொண்ட சமந்தா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதன் படி ஓ பேபி சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்று கொண்டார் இதையடுத்து கவர்ச்சி பாதைக்கு திரும்பிய சமந்தா புஷ்பா ஐட்டம் சாங் மூலம் மிகவும் பிரபலமானார். விவகாரத்திற்குப் பிறகு முழுநேர கவர்ச்சி நாயகியாக மாறியுள்ளார். இவர் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதோடு கவர்ச்சி கொஞ்சம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வெகுவாக ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் சமந்தா. மனதையும் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும்ஹார்ட் ஒர்கவுட்டில் ஈடுபட்டு வரும் சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் யசோதா படத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைக்கும் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இந்த படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்கியுள்ளனர்.

இதில் தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த வீடியோவில் சமந்தா ஒரு மருத்துவமனையில் இருப்பது போன்றும் ஒரு புறாவை பிடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி யசோதா ஒரு திரில்லர் கதையாக இருக்கும் என தெரிகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!