
பார்த்திபன் எப்போதும், வித்தியாசமான கதையை உருவாக்குவதில், வித்தகராக வலம் வருபவர். கடைசியாக இவர் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் கடைசியாக வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து, பார்த்திபன் தற்போது இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு, இந்த படம் 96 நிமிடங்கள் ஓடக்கூடியது.
நட்சத்திர பட்டாளங்கள்:
இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் ரீலீசுக்கு தயாராகி வருகிறது.
'இரவின் நிழல்' படத்தின் டீசர்:
பார்த்திபன் இயக்குகத்தில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான், சமுத்திரகனி, சசி, எழில், மதன் கார்க்கி உள்ளிட்ட பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மைக்கை தூக்கி வீசிய பார்த்திபன்:
அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் மற்றும் பார்த்திபன் பேசி கொண்டிருந்தனர். அப்போது ஏ. ஆர் ரகுமானை தொடர்ந்து, பார்த்திபன் பேசும் போது, திடீரென மைக் வேலை செய்யாமல் போனதால், கடும் கோபமடைந்த அவர் மைக்கை தூக்கி கீழே அமர்ந்திருந்த ரோபோ சங்கரிடம் வீசினார். இந்த செய்தி காட்டு தீ போல் இணையம் முழுவதும் பரவியது.
மன்னிப்பு கேட்ட பார்த்திபன்:
இதனையடுத்து பார்த்திபன் இதுதொடர்பாக வெளியிட்ட வீடியோவில், “இச்சம்பவம் பெரிய சங்கடத்தை கொடுத்துள்ளது. எனது கோபத்தை நியாயப்படுத்தவில்லை. தன்னுடைய செயல் அநாகரீகமானது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.
வைரலாகும் ட்விட்டர் பதிவு:
இந்நிலையில், தற்போது பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், அவர் அந்த பதிவில் “மைக்கை கண்டுபிடித்தவர் எமைல் பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ சங்கர், மைக்கால் பிடிபட்டவர் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தற்போது இந்த ட்விட்டர் பதிவு காட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே முத்தத்தின் மூலம், சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நெட்டிசன்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.